முத்தரையர்களும் அரசியலும் (பாகம் இரண்டு)
முத்தரையரின் இன்றைய நிலை
பழைய வரலாறுகளை புரட்டினால் அதில் அடிக்கடி அடிபடும் பெயரில் ஒன்று முத்தரையர்...

இன்றைக்கு இந்த சாதி எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வது அவசியமாகும்...இந்த நோக்கத்தில் தான் கடந்த மூன்று மாதங்களாக நான் சில தகவல்களை திரட்டினேன்,
பின்புதான் தெரிந்தது இந்த சாதி எவ்வளவு இழிநிலையில் உள்ளது என்று...ஆம் இந்த சாதி தமிழகம் முழுவதும் பெரும்பான்மையாக உள்ள சாதிகளில் ஒன்று என்பது எவ்வளவு உண்மையோ,அதே அளவு உண்மை
தமிழகம் முழுவதும் உள்ள ஒரே சாதி இதுதான்...வன்னியரை எடுத்து கொள்ளுங்கள்,அவர்கள் சென்னையில் இருந்து வேதாரன்யதோடும்,பெரம்பலுரோடும் தெற்கில் முடிந்து போகின்றனர்...மேற்கில் தருமபுரியோடு சரி,கொங்கு வேளாளர் கொங்கு நாடு தவிர்த்து மற்ற இடங்களில் விரலை விட்டு எண்ணமுடியும்...ஆதிக்கம் கொண்ட கள்ளர் மதுரை,புதுகை,தஞ்சையின் சிலபகுதி,சிவகங்கை,ராம்நாத்,தேனி,போன்ற இடங்களில் மட்டும் சற்று பெரும்பான்மையாக வஉள்ளனர் அதாவது தமிழகத்தின் மத்திய பகுதியில் மட்டும் பரவி உள்ளனர்,
அகமுடயோர்,மறவர் நெல்லை,மதுரை,ராமநாதபுரததுடன்சரி...மொத்தம் ஆறு மாவட்டத்தில் மட்டுமே ஆதிக்கமும் பரவலும்...நாடார் விருதுநகரை சுற்றிமட்டும்,செட்டியார்,நாயிடு,நாயக்கர்,ரெட்டியார்,முதலியார் சிறுபான்மையினராக -மக்கள் தொகையில் மட்டும்-தமிழகத்தில் சிதறிக்க்கிடக்கின்றனர்...
ஆனால் மேலே சொன்ன முத்தரையர்களை இவர்களோடு ஒப்ப்பிடவே முடியாது மூன்றே வரியில் சொல்லி விடலாம் அதாவது இவர்கள் தமிழகத்தின் மத்திய பகுதியில் முழுவதும் பரவிவுள்ளனர்...இங்கிருந்து பிழைப்புகளுக்காக இவர்கள் சென்னை வுட்பட தமிழகத்தின் பெரிய நகரங்களுக்கு சென்று மாற்று இனத்தவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக ,அவர்களுக்கு கீழே அவர்கள் சொல்லுவதை அப்படியே செய்து மாத வூதியத்தில் அடிமை வாழ்க்கை வாழுகின்றனர்...
இவர்களது எண்ணிக்கையே சில சாதிகளின் எண்ணிக்கைக்கு சமமாக அந்த நகரங்களில் இருக்கின்றது என்றலும் அங்கு பூர்வ குடிகளாகவும் இந்த இனத்தவர் இருக்கின்றனர்...
குறிப்பாக சென்னையில் தெலுங்கு முத்தரையர்கள் லட்சக்கணக்கில் வுள்ளனர்...அண்மையில் அவர்களது சங்கத்தின் உதவியால் திரு. திருமேனி அவர்களின் மூலம் புள்ளிவிவரதோடு தெரிய வந்தது...
இதில் பெரும்பாலனோர் தாங்கள் எந்த சமூகத்தவர் என்பதை தெரியாமலேயே இருக்கின்றனர்...தெரிந்தவர்களும் காட்டிக்கொல்லாமல் இருக்கின்றனர்...மேலும் 29 பிரிவுடைய இந்த சாதியின் சில பிரிவுகளும் பூர்வகுடிகளாக இருக்கின்றனர்...எனவே இவர்களது எண்ணிக்கை பல லட்சம்(சென்னையில் மட்டும் ) ஆனால் அந்த எண்ணிகையை நான் குறிப்பிட விரும்பவில்லை.
ஏனென்றல் நீங்கள் நம்ப மாட்டிர்கள்...கற்பனை என்று நினைப்பீர்,அதனால் உங்கள் பார்வைக்கு இந்த பதிவே கற்பனைக்கலைஞ்சியமாக தெரிந்து விடும் என்பதால் விட்டு விடுகின்றேன்...காலம் வரும்போது நீங்களே தெரிந்து கொள்வீர்.இது சென்னையில்,அடுத்தது வேலூர் பகுதி,இங்கு பணக்காரர்களாக,அரசியலில் பெரும்பான்மையாகவும் நாயக்கர் என்னும் பெயரில் நம்மவர்கள் குவிந்து கிடக்கின்றனர் ஆனால் அவர்களிடம் நீங்கள் முத்தரையர் என்று சொன்னால் அப்படியா!!! என்று ஆச்சர்ய படுகின்றனர்...அவ்வளவு விழிப்புணர்வு...
அடுத்து தருமபுரி,கிருஷ்ணகிரி பகுதி இங்கும் நம்மவர்கள் குறைந்தளவில் இருக்கின்றனர்.கோவை கவுண்டர் என்று சொல்லுவார்கள்...ஆனால் ஆச்சர்யம் என்னவென்றல் அங்கு அவர்களை விட வலையர் என்ற பெயரில் வாழும் முத்தரயர்கள்தான் அதிகம் என்று தெரிய வந்துள்ளது...இது தமிழகத்தின் வடக்கு பகுதியில்...
அடுத்து மதுரை பகுதி இங்கும் கள்ளர்களை விட பெரும்பான்மை நம்மவர்கள்தான்...மிகப்பெரிய வாக்கு வங்கியாகவும் அவர்களுக்கு உதவி வருகின்றோம்,இந்த பகுதியில் நத்தம் மேலூர் போன்ற தொகுதிகள் நம்மால் ஆளப்பட்டு இப்பொழுது மாற்றார்களுக்கு தாரைவார்க்கப் பட்டது.அன்று ஆண்ட நாம் இன்று இந்த தொகுதிகளை நினைத்துக்கூட பார்க்க முடியாதாம்...முற்றிலும் அவர்கள் கட்டுபாடு தானாம்...இருந்தாலும் உணர்வு கொண்ட இளையவர்கள் தேர்தல் நேரத்தில் போராடி சில ஆயிரம் ஓட்டுகளை நம்மவர்களை சுயேட்சையாக நிறுத்தி பெற்று சந்தோசப்படுகின்றனர்,,, பெரும்பாலும் வலையர் என்ற பெயரில் வாழுகின்றனர்.இதேநிலைதான்
ராம்நாடு மற்றும் சிவகங்கையிலும்...புதுகை தஞ்சையில் சில தொகுதியில் நம்மவர்கள் தான் எப்பொழுதும் ஆதிக்கம்,MLAபோன்ற பதவிகள் இதுவரை நம் வசம் இருந்தாலும் கடந்த தேர்தலில் வழக்கமான சூழ்சிகளால் தஞ்சையில் ஒரு தொகுதியை இழந்தோம்.ஆலங்குடி மட்டும் வழக்கம் போல ஒதுக்கப்பட்டது.இந்த பகுதியில் இவர்கள் அம்பலகாரர்,என்று பெரும்பான்மையாக வாழுகின்றனர்...
இவர்களது அரசியல் பலம்,பண பலம் அனைத்தும் முக்குலதொருக்கு நிகராக இருப்பதால் நேரடி மோதலில் ஈடுபட மாட்டார்,ஆனால் வலையர் அம்பலக்காரர் பிரிவு அதிகம் வுள்ள பகுதி தமிழகத்தில் இதுதான்...பெண் கொடுத்தல் எடுத்தல் கூட இவர்களுக்கு கிடையாது.ஒன்று படவே மாட்டார்கல்.தஞ்சையின் சில இடங்களில் இது போன்ற நிலைதான்.
அடுத்து திருச்சி,இதை கோட்டை என்று சொல்லிக்கொள்வார்கள். ஒரு சிறப்பம்சம்...இங்கு தொண்டர்களை விட தலைவர் எண்ணிக்கை அதிகம்...முன்பெல்லாம் மாற்று இனத்தவரோடுதன் சண்டை போடுவர் இப்போது இவர்களுக்குலே அடித்து கொள்வார்கள்...காரணம் தலைவர்கள்..
முத்தரையர் சமுதாயத்திலே படித்தவர்கள் அதிகம் உள்ள பகுதி இதுதான் ஆனால் ஒற்றுமை கிடையாது...முத்துராஜா என்று ஆணவத்தோடு சொல்லுமளவு இங்கு இவர்களது ஆதிக்கம் உள்ளது. மூன்று தொகுதிகள் கையில் உள்ளது ஒரு அமைச்சரும் உள்ளார்,சில பகுதிகள் மட்டுமே கள்ளர் வசம் உள்ளது மற்றவை முத்தரையர் கட்டுப்பாடே...மொத்தமாக திருச்சி தமிழகத்தின் இருதயம் மட்டுமல்ல முத்தரையர்களுக்கும்,தான்..இங்கு தலைவர்கள் மட்டும் ஒன்றுபட்டால் போதும் உயிரையும் தரும் இலட்சியபடை காத்து கிடக்கிறது ஆனால் இதை தலைவர்கள் உணர்ந்து சரியான பாதையில் பயன்படுத்துவார்கள என்று தெரியவில்லை.உணர்ந்தால் முத்துராஜாக்கள் ராஜா ஆவதை யாராலும் தடுக்க முடியாது..
இந்த தலைவர்கள் அடிதடிக்காக...அரசியல் செய்ய நினைப்பதை விடுத்து அரசியலுக்காக...அடிதடி செய்தால்...மற்றவர்களின் மூச்சு சத்தம் கூட கேட்காது...
தமிழகத்தின் தென்..பகுதிலும் ..இவர்கள் பல பெயர்களில் வாழுகின்றனர்...நாடார்,முக்குளதோர் போன்றவர்களுக்கு முன் ஏதும் செய்யா இயலாத வர்களாக இவர்கள் வஉள்ளனர்,சில இடங்களில் வலையர் என்று வாழுகின்றனர் ,முகநூல் போன்றவற்றின் மூலம் இவர்கள் வெளியில் வந்துகொண்டிருக்கின்றனர்...பெரியளவில் தகவல் கிடைக்கவில்லை...இருந்தாலும் துத்துக்குடி மீனவர்கள் அதிகம் நம்மவர்கள்தான்...அவர்களும் தங்களை முத்தரையர் என்று முகநூல் மூலம் அறிந்து கொண்டுவிட்டனர் திருச்சிவரை கார் எடுத்துவந்து சங்க நிகழ்வில் கலந்துகொள்ளும்மளவு வந்துவிட்டனர்..
.ஆந்திராவிலே தெலுங்கனவுக்காக போராடும் சந்திரபாபு பின்னல் நிற்பது தெலுங்கு முத்தரையர் என்றால் அணுவுலையை மூட சொல்லும் உதயகுமார் பின்பு நிற்பவர்கள் முழுவதும் முத்தரைய வலயர்களே...

அரசாண்ட வம்சம் இன்று குடிசைபோட்டு கூலி வேலை செய்துவாழுகின்றது....எல்லோரும் வளர்ச்சியை நோக்கி செல்ல இவர்களோ இருப்பதை இழந்துகொண்டு இருக்கின்றனர்...
இந்த நிலை மாறுவது எப்போது???? மாறுவதற்கு வாய்ப்பு வுண்டா?
பயணம் தொடரும்..... விடியலை நோக்கி உங்கள் திரு துரை ராஜ்குமார்
முத்தரையர் ( முத்துராஜா ) ஷெரிங் க்ரூப் சார்பாக...