1999 இன்றைய புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தைப் பிரதிபலிக்கக் கூடியது.

டொரன்டோ: கனடிய தமிழ் இயக்குநர் லெனின் எம் சிவம் உருவாக்கத்தில், சர்வதேச அளவில் விருதுகளையும் பாராட்டுக்களையும் குவித்த '1999′ திரைப்படத்தின் டிவிடி உலகமெங்கும் வெளியாகியுள்ளது.
நார்வே தமிழ் திரைப்பட விழா, வான்கூவர் மற்றும் டொரன்டோ சர்வதேச திரைப்பட விழா உள்ளிட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்ற படம

1999 - கதை:
படத்தின் கதை மிக வித்தியாசமானது. இன்றைய புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தைப் பிரதிபலிக்கக் கூடியது.
அம்மாவை இழந்து, அப்பாவுடன் ஸ்காபுரோவில் வசிப்பவன் இளைஞன் அன்பு. பெயரில் அன்பிருந்தாலும் நிஜத்தில் அது கிடைக்காததால், அன்புக்காக ஏங்கும் இவன், சண்டைக் குழு ஒன்றில் இணைகிறான்.
இந்தக் குழுவின் தலைவன் குமார். தம்பியைத் தவிர எந்த உறவுகளுமே இல்லை இவனுக்கு.
இந்த இருவரிலிருந்தும் முற்றிலும் மாறுபட்டவன் அகிலன். தனது முயற்சியால் வாழ்க்கையில் முன்னேறி, பல்கலைக்கழக இறுதியாண்டில் படிக்கும் இவன், தன்னைப்போல பெற்றோரை இழந்த சிறுவர்களுக்காக நிதி திரட்டி அவர்களுக்கு உதவுவதையே தனது கடமையாகக் கொண்டவன்.
இம்மூவருமே இலங்கையில் நடைபெற்ற இனப்போராட்டத்தில் குழந்தைப் பருவத்திலேயே தம் உறவுகளைப் பறிகொடுத்தவர்கள், என்பதுதான் ஒரே ஒற்றுமை.
டொரன்டோ மாநகரத்தில் ஒரு அமைதியான சனிக்கிழமையில், இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் இந்த மூன்று இளைஞர்களின் வாழ்க்கை எப்படி முற்றாக மாறுகிறது என்பதுதான் '1999′http://www.facebook.com/groups/mutharaiyar/


No comments:

Post a Comment