http://www.facebook.com/groups/mutharaiyar/
அ.வெங்கடாசலம் (A.Venkatachalam) இவரின் சொந்த ஊர் வடகாடு.ஆலங்குடி மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சுற்றுலாதுறை அமைச்சராகவும்,பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார்.
அக்டோபர் 7 2010 அன்று முகம்தெரியாத கும்பலால் வெட்டி கொலைசெய்யப்பட்டார்.
[தொகு]வளர்ச்சியும் அரசியல் பின்னணியும்
வெங்கடாசலம் தன்னுடைய கல்வி பயணத்தை இறுதியாக புதுக்கோட்டையில் உள்ள அரசுக்குச்சொந்தமான மானன்னர் கல்லூரியில் PUC பயின்றார்.அந்த காலக்கட்டத்திலே அவரின் தகப்பனார் அழகர் சேர்வை வடகாடு பகுதியில் மிகுந்த செல்வாக்குடனும்,மிக நேர்த்தியான தெய்வ நம்பிக்கையுடைவருமாக திகழ்தார்.அந்த வழியில் வெங்கடாசலமும் குறிப்பிட்ட வழிபாட்டு தளங்களை செப்பனிடுதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.குறிப்பாக ஸ்ரீ பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் செப்பனிடுதல் பணிக்காக இவர் பல வழிகளில் ஈடுபட்டிருந்தார்.1984-ல் அரசியல் களத்தில் இறங்கிய வெங்கடாசலம் 2010 வரை தனக்கென ஒரு பாதையை வகுத்து அதன் வழியாக அவரின் சமுதாய மக்களின் மேம்பாட்டுக்காக பெரிதும் பாடுபட்டவர்.1996ல் கட்சியில் இடம் கொடுக்காத நிலையிலும் சட்டமன்ற தேர்தலில் தன்னிச்சையாக போட்டியிட்டு வெற்றிவாகை சூடிய நபர் என்பது குறிப்பிடத்தக்கது.சுமார் 30ஆண்டுகள் அரசியல் அனுபவம் கொண்ட ஒரே தலைவர் இச்சமூகத்தில் இவர் மட்டுமே என்று அப்பகுதி மக்கள் முன்மொழிவதை காண முடியும்.ஆலங்குடி தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் பல லட்சம் மதிப்பிலான கட்டிடங்களை வடகாடு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்காக கட்டி கொடுத்துள்ளார். இவரின் சொந்த இடத்தில் வடகாடு கிராமத்திலேயே வற்றாத நீர் ஆதாரம் கொண்ட கொப்பங்குளம் என்ற குளத்தினை அமைத்து அதன் கரையோரத்தில் ஒரு பிள்ளையார் வழிபாட்டுத்தலத்தினை கட்டி வந்தார்.அக்குலத்தின் பரப்பளவு சுமார் 15ஏக்கர் முதல் 25ஏக்கர் கொண்டதாகும்.அக்குலத்தின் ஆழம் சுமார் 15அடி கொண்டதாகும்.மின்சாரம் இல்லாத வேலைகளின் கிராமமே இக்குளத்தையே பயன்படுத்திவருகின்றனர்.
N.RAVI
இதுவரை கொலையாளியை கண்டு பிடிக்க சரியான முயற்சியை எந்த அரசாங்கமும் செய்யவில்லை. கட்சிகள் அனைத்தும் வெறும் ஓட்டுக்காக நம்மை பயன் படுத்துவதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். சிந்திப்போம் ஒன்றுபடுவோம். http://www.facebook.com/groups/mutharaiyar/
N.RAVI
இதுவரை கொலையாளியை கண்டு பிடிக்க சரியான முயற்சியை எந்த அரசாங்கமும் செய்யவில்லை. கட்சிகள் அனைத்தும் வெறும் ஓட்டுக்காக நம்மை பயன் படுத்துவதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். சிந்திப்போம் ஒன்றுபடுவோம். http://www.facebook.com/groups/mutharaiyar/
No comments:
Post a Comment