http://www.facebook.com/groups/mutharaiyar/ ஒரு விடுதலைப் போராட்டத்தின் நடுவில் ஓயாத அலைவுகள் – சிறைச்சாலைகள் – தலைமறைவுப் பொழுதுகள் – உசாவல்கள் – கடல்கடந்த பாய்ச்சல்கள் – இவற்றின் இடைய்ல், ஒயாது தமிழ்மொழி – தமிழ் இனம் – தாய்மண் பற்றுடன் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காகவும், அவர்களின் உரிமையைப் பெற்றுத் தருவதற்காகவும் உணர்ச்சி நிறைந்த கவிதைகளையும், சிந்தனைக் கனல் சுடரும் கட்டுரைகளையும், சிந்திக்கத் தூண்டும் குறுங்கதைகளையும் படைத்துக் கொண்டிருப்பவர் கவிஞர் காசி ஆனந்தன்.
கவிஞர் காசி ஆனந்தன் படைப்புகள் கூர்மையானவை; வேகமும் உணர்ச்சியும் கொண்டவை; உண்மையின் ஒளி பொருந்தியவை; சிந்திக்கத் தூண்டுபவை; போலித்தனங்களையும் பொய்மைகளையும் வெளிச்சப்படுத்துபவை. சொல்லிலும் செயலிலும் – இலக்கியப் படைப்புகளிலும் – வாழ்க்கைச் செயல்பாடுகளிலும் – மாறுபாடு இல்லாது, வாழ்க்கையையே போராட்டமாகக் கொண்டு செயலாற்றி வரும் ஓர் உண்மை மனிதனின் இதய ஒலிகள் அவை.
கவிஞர் காசி ஆனந்தன் மனித நேயம் மிக்கவர்; மனிதர்கள் மனிதர்களாக வாழ வேண்டும்; தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளைப் பெற்று விடுதலையானவர்களாக அன்போடும் அமைதியோடும் மகிழ்ச்சியோடும் வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர். அதற்காகப் போராடுபவர்.
மானம்
உன்
கோவணம்
அவிழ்க்கப்பட்டதா?
அவன்
கைகளை
வெட்டு!
கெஞ்சி வாங்கி
கோவணம்
கட்டாதே...
அம்மணமாகவே
போராடு..!
குப்பைத்தொட்டி..
அலுவலகத்தில் இருக்கிறவனுக்
இது குப்பைத்தொட்டி
குப்பை பொறுக்கி வாழ்கிறவனுக்கு
இதுஅலுவலகம்......
நல்லகாலம் வருகுது
குடுகுடு..நல்லகாலம் வருகுது
நல்லகாலம் வருகுது..
தெருவிலேயே நிற்கிறான்
நல்லகாலம் வருகுது..
தெருவிலேயே நிற்கிறான்
குடுகுடுப்பைக்காரன்
No comments:
Post a Comment