மூடிய கதவுகள் http://www.facebook.com/groups/mutharaiyar/
ஆடிப்பெருக்குக்கு
அலையோடும் கொஞ்சம்
நுரையோடும் தவழ்ந்துவரும்
காவிரித்தாய் விவசாயியின்
கண்ணீரில் தத்தளிக்கிறாள்..
முப்போகம் பயிரிட்டு
முத்தான மணிகளை
அறுவடை செய்த பாட்டாளி
அணையின் மூடிய கதவுகள்
திறக்காதா என்று தினம்
ஏக்கத்தால் வானத்தை
ஏறிட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறான்..
தமிழகத்தின் நெற்களஞ்சியம்
வறட்சிப் பகுதியாய்
அறிவிக்கக்கோரி
அரசாங்கத்திடம்
கதறிக்கொண்டிருக்கிறது....
நன்றி : நண்பர் முத்துபேட்டை மாறன் முத்துராஜாhttp://www.facebook.com/groups/mutharaiyar/
http://www.facebook.com/groups/mutharaiyar/
எங்கள் மண்ணின் கதை
உங்களுக்காக
உங்கள் முன்னோர்கள்
கரடுமுரடாகக் கிடந்த
எங்களை
சமன்படுத்தி
வயலாக்கி வரப்புவெட்டி
பண்படுத்தித் தந்தார்கள்
பாசனத்திற்கு வாய்கால் வெட்டி
மதகும் கட்டி வைத்தார்கள்
ராமன் கோட்டகம்
மொசவெளிக் கோட்டகம்
பெயரும் வைத்துச் சென்றார்கள்.
நாங்களும் பயிரிட்ட உங்களுக்கு
பாதகம் செய்யாமல் நல்ல
விளைச்சலைத் தானே தந்தோம்
நீங்களே நன்றி மறந்து போய்
பணத்திற்காக
எங்களை
இறால் பண்ணைக்கு
தாரை வார்த்து கொடுத்து விட்டு
ரேஷன் கடையில்
வரிசை பிடித்து நிற்கிறீர்கள்.
நாங்கள்
என்ன பாவம் செய்தோம்?!
நிழல் தந்த
தில்லை மரங்களை
அழித்துவிட்டார்கள்
உப்புநீரை உள்ளே விட்டு
உவகை கொண்டார்கள்.
இரைச்சலிலே எங்களை
அல்லாடவிட்டார்கள்
வயலாக இருந்த எங்களை
குளமாக்கிவிட்டார்கள்.
நாங்களும்
இப்போது
இயந்திரமாய்
மாறிவிட்டோம்.
எங்கள் சுவடுகள்
அழிக்கப்பட்டுவிட்டன.
உங்கள் அடுத்த தலைமுறை
வயல்வெளிகளை
இணையதளங்களில்தான்
தேடப்போகிறார்கள்!
நன்றி : நண்பர் முத்துபேட்டை மாறன் http://www.facebook.com/groups/mutharaiyar/

அலையோடும் கொஞ்சம்
நுரையோடும் தவழ்ந்துவரும்
காவிரித்தாய் விவசாயியின்
கண்ணீரில் தத்தளிக்கிறாள்..
முப்போகம் பயிரிட்டு
முத்தான மணிகளை
அறுவடை செய்த பாட்டாளி
அணையின் மூடிய கதவுகள்
திறக்காதா என்று தினம்
ஏக்கத்தால் வானத்தை
ஏறிட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறான்..
தமிழகத்தின் நெற்களஞ்சியம்
வறட்சிப் பகுதியாய்
அறிவிக்கக்கோரி
அரசாங்கத்திடம்
கதறிக்கொண்டிருக்கிறது....
நன்றி : நண்பர் முத்துபேட்டை மாறன் முத்துராஜாhttp://www.facebook.com/groups/mutharaiyar/
http://www.facebook.com/groups/mutharaiyar/
எங்கள் மண்ணின் கதை
உங்களுக்காக
உங்கள் முன்னோர்கள்
கரடுமுரடாகக் கிடந்த
எங்களை
சமன்படுத்தி
வயலாக்கி வரப்புவெட்டி
பண்படுத்தித் தந்தார்கள்
பாசனத்திற்கு வாய்கால் வெட்டி
மதகும் கட்டி வைத்தார்கள்
ராமன் கோட்டகம்
மொசவெளிக் கோட்டகம்
பெயரும் வைத்துச் சென்றார்கள்.
நாங்களும் பயிரிட்ட உங்களுக்கு
பாதகம் செய்யாமல் நல்ல
விளைச்சலைத் தானே தந்தோம்
நீங்களே நன்றி மறந்து போய்
பணத்திற்காக
எங்களை
இறால் பண்ணைக்கு
தாரை வார்த்து கொடுத்து விட்டு
ரேஷன் கடையில்
வரிசை பிடித்து நிற்கிறீர்கள்.
நாங்கள்
என்ன பாவம் செய்தோம்?!
நிழல் தந்த
தில்லை மரங்களை
அழித்துவிட்டார்கள்
உப்புநீரை உள்ளே விட்டு
உவகை கொண்டார்கள்.
இரைச்சலிலே எங்களை
அல்லாடவிட்டார்கள்
வயலாக இருந்த எங்களை
குளமாக்கிவிட்டார்கள்.
நாங்களும்
இப்போது
இயந்திரமாய்
மாறிவிட்டோம்.
எங்கள் சுவடுகள்
அழிக்கப்பட்டுவிட்டன.
உங்கள் அடுத்த தலைமுறை
வயல்வெளிகளை
இணையதளங்களில்தான்
தேடப்போகிறார்கள்!
நன்றி : நண்பர் முத்துபேட்டை மாறன் http://www.facebook.com/groups/mutharaiyar/
No comments:
Post a Comment