யாதுமாகி காணாமல் போன கடவுளர்கள்

யாதுமாகி காணாமல் போன கடவுளர்கள்;;;

நான் முதலில் இவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்திவிடிகிறேன் பிறகு இவர்களின் பூர்வத்தைப் பற்றி பேசுவோம். இங்கே முதலாவதாக நிற்பவர் சேயோன், அடுத்தவர் முருகன், அடுத்து திருமால், பிறகு வருணன், கடைசியில் கொற்றவை. இந்த ஐந்துபேரில் சிலரை பற்றி நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். கேட்டீர்களா கொடுமையை நீங்கள் கேள்விபட்டிருக்கலாம் என்றுதான் வார்த்தை வருகிறதே தவிர நீங்கள் நிச்சயம் அறிந்திருக்கலாம் என்று வரவில்லை. இதுதான் இவர்களுக்கு நேர்ந்த கொடுமை.

இந்த ஐந்துபேரும் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்களை, தமிழ் கலாச்சாரத்தை வாழவைத்த தெய்வங்கள். இன்று இவர்கள் தமிழ் கலாச்சாரத்திலிருந்து தள்ளிவைக்கப்பட்டிருக்கிறார்கள். பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழ் அடையாளங்களே இல்லாமல் இவர்களுடைய முகங்கள் சிதைக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட இவர்களின் இருப்பே கேள்விக்குறிதான். இவர்களைப் பற்றி முழுதும் தெரிந்துகொள்ள நாம் தமிழர்களுடைய ஐந்தினை பாகுபாட்டைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும்.

ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் தாங்கள் வாழும் நிலத்தை ஐந்துவகையாக பிரித்துவிட்டார்கள். கண்களுக்கு எட்டிய தூரம் பரந்த சமவெளி நிலத்தையும் அந்த நிலத்தை நம்பியே தங்களுடைய வாழ்வாதாரமும் இருந்தால் அந்த பரந்த சமவெளி நிலத்தை மருத நிலம் என்றார்கள். கண்களுக்கு எட்டிய தூரம் சுற்றி சூழ்ந்திருக்கும் மலை பிரதேசத்தையும் அந்த மலையை நம்பி தங்களுடைய வாழ்வாதாரம் இருந்தால் அந்த இடத்தை குறிஞ்சி நிலம் என்றார்கள். இப்படியே மலை பிரதேசத்தை ஒட்டியிருக்கும் நிலத்தை முல்லை நிலம் என்றார்கள். பரந்து விரிந்த கடலையும் தங்களுடைய வாழ்வாதாரம் கடலை நம்பியிருப்பதால் அதை நெய்தல் நிலம் என்றார்கள். கோடை காலத்தில் முல்லை நிலம் வெப்பத்தால் வரண்டு இருப்பதால் அதை பாலை என்றார்கள்.

தமிழர்கள் இயற்கையை வழிபட்டவர்கள். இயற்கையையும், இயற்கை தரும் வளத்தையும் கடவுளர்களாக பண்டைய தமிழர்கள் உருவகம் செய்திருந்தார்கள். அப்படியே இந்த ஐந்துவகை நிலங்களுக்கும் தனித் தனியே கடவுளர்கள் உண்டு. மருத நிலத்தை ஆட்சி செய்த கடவுள் நாம் முன்னர் அறிமுகப்படுத்திய சேயோன். இவரை எல் என்று குறிப்பிடுவதும் உண்டு. எல் என்றால் சூரியனைக் குறிக்கும். மருத நிலம் விவசாயத்திற்கு முக்கியத்துவம் தருவதாலும், விவசாயத்திற்கு சூரியன் முக்கியம் என்றதாலும் தமிழர்கள் அந்த சூரியனை சேயோனாக உருவகம் செய்தார்கள். இவருக்கு குறிப்பிட்ட உருவம் கிடையாது என்றாலும் உழைப்பு மற்றும் செழுமையின் அடையாளமாக எருது உருவத்தை இவருக்கு வழங்கினார்கள். இந்த உருவத்தை சிந்து நாகரீ முத்திரைகளில் காணலாம்.

குறிஞ்சி நிலத்தை ஆட்சி செய்தவர் முருகன். தற்பொழுது வழக்கில் இருக்கும் சுப்பிரமணி என்கிற முருகனுக்கும், இந்த முருகனுக்கும் சம்பந்தம் கிடையாது. இவர் எக்காலத்திலும் கோவணான்டியாக திருசெந்தூரில் நின்றது கிடையாது. அப்படியே இவருக்கு இரண்டு மனைவியரும் கிடையாது.

முல்லை நிலத்தை ஆட்சி செய்தவர் திருமால். நெய்தல் நிலத்தை ஆட்சி செய்தவர் வருணன். ரிக் வேத கால வருணனுக்கும் இந்த வருணனுக்கும் துளியும் சம்பந்தம் கிடையாது. பாலை நிலத்தை ஆட்சி செய்தவர் கொற்றவை. இவர் பெண்பால் கடவுள். இவரை தமிழர்கள் வீரத்திற்கு அடையாளமாக வழிபட்டார்கள். தமிழர்கள் இனக்குழு வாழ்க்கை நடத்திய காலத்தில் போர் கடவுளாக இந்த கொற்றவையை வழிப்பட்டார்கள். போருக்கு செல்வதற்கு முன்பு கொற்றவையை வழிபட்டு, கரி சோறு மற்றும் மதுபான விருந்திற்கு பிறகு போருக்கு புறப்படுவார்கள்.

ஆனால் இன்று இவர்களின் அடையாளம் கூட உருத்தெரியாமல் துடைத்து அழிக்கப்பட்டுவிட்டது. இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் சிறிது சிறிதாக தமிழகத்திற்குள் ஊடுருவிய ஆரியர்கள் தமிழர்களின் ஒட்டுமொத்த சமய வாழ்வையும் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார்கள். இயற்கையோடு ஒட்டியிருந்த தமிழர்களின் சமய சடங்குகளுக்கு ஆரியர்களின் புராண மற்றும் வேத விளக்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த விளக்கங்கள் மொத்தமும் கட்டுக் கதைகளாகவே உருவாக்கப்பட்டன. இந்த கதைகளில் காமத்திற்கு முக்கிய இடம் தரப்பட்டது. இவைகள் எல்லாம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டது என்று தமிழர்களை நம்பவைக்கும் முயற்சிகளுக்கும் குறைகள் கிடையாது. யாருடைய முன்னோர்கள் என்று தமிழர்கள் கேட்க தவறியதன் விளைவு தமிழர்களின் கடவுளர்கள் காணாமல் போகத் தொடங்கினார்கள்.

சேயோன், ஆரிய சிவனாக மாற்றப்பட்டார். இந்த உருவ மாற்றத்திற்கு ஆரியர்கள் புராணங்களை எழுதி குவித்தார்கள். அந்த புராணங்கள் வழிவழியாக தமிழர்களின் மத்தியில் உலாவந்தது. விளைவு சேயோன் காணாமல் போனார். அடுத்து கொற்றவை ஆரிய பார்வதியாக மாற்றப்பட்டார். சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டி புராணங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டன. கதைகள் புகுத்தப்பட்டன. கொற்றவையும் காணாமல் போனார். சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் முடிந்ததும் சுப்பிரணமனியன் பிறந்து முருகன் காணாமல் போனார். சுப்பிரணமனியனின் பிறப்பிற்காக வேண்டி மேலும் புராணக் கதைகள் திருத்தப்பட்டன. இந்த புராணக்கதைகள் தானாகவே திருமாலை பெருமாளாக்கி விஷ்ணு அவதாரம் எடுக்கவைத்தது. திருமாலும் காணாமல் போனார். இறுதியாக வருணன் எந்தவித மாற்றத்திற்கும் சரிபட்டு வராததால் புராணங்கள் அவரை தலைமுழுகிவிட்டன.

தமிழனின் சிறப்புகளை இன்று ஆரிய மூலத்தில் தேடவேண்டிய நிலைக்கு நம்மை இழுத்துவந்தற்கு முழு மூல காரணம் தமிழர்களே. ஆரியத்தை பிரித்து தமிழின சிறப்புகளை பற்றி பேசினால் ஆரியர்களை பிரித்து காட்டி இன வாதம் பேசுகிறோம் என்கிறார்கள். எது இன வாதம் பிறிதொரு இனத்தின் கடவுளர்களை உருதெரியாமல் சிதைப்பது இன வாதமா இல்லை தன்னுடைய மூதாதயர்களின் சிறப்புகளைப் பற்றி பேசுவது இன வாதமா
                                                                             Karikalan Jayaraman
                                                                             Naveena Alexander

No comments:

Post a Comment