முத்தரையர்ரும் -முஸ்லிம்களும்

 முத்தரையர்ரும் -முஸ்லிம்களும்.....
திரு  Pjayapal Veer Muthurayar  என்ற  நண்பர்  facebookகில்  எழுதிய கட்டுரைக்குக்கும், இதுபோல பல காலங்கள் ஒற்றுமையாக முஸ்லிம் களுடன். வாழ்ந்த பகுதியல்  புதியதாக  உண்டாகும் பல சம்பவங்களுக்கு என்ன காரணம்  என்று விடை தெரியாமல் எழுதிய எங்கள் கட்டுரை. (குறிப்பு,,,கீழே  திரு  Pjayapal Veer Muthurayar   எழுதிய ORIGINAL போஸ்ட் உள்ளது படித்துவிட்டு  இதை படிக்கவும்)
          காலம் சென்ற ஒப்பற்ற தலைவர் நம் இன வழிகாட்டியும்,சேர்மன் திரு ஜெயபால் அவர்களின் வழிகாட்டலுடன்,
இன்று பல இடர்களை கடந்து திருமதி செல்வராணி அவர்கள் வீரப்பெண் மணியாக,நமது இன வளர்சிக்கு பாடுபடும் அவர்களின் பனி,புகழ் சிறக்க,வாழ்த்துவோம்..
ஒரு நியாயமான விசயத்தினை முன்னிறுத்தி போராடும் தொக்காலிக்காடு முத்தரையர் மக்கள் வெற்றிப் பெற வாழ்த்திகிறோம்,
 அதே நேரத்தில் நமக்கு எழும் சில சந்தேகங்கள் சில,
  • முதலில் இந்த பிரச்சனை தொடங்கிய போதே பேசி சரி செய்ய முடியாமல் போனதன் காரணம் என்ன
  • எல்லா பலமும் பொருந்திய ராம கோபாலனே நேரில் வந்தார் என்றால் விசயத்தின் தீவிரம் புரிகிறது, அதே ராம கோபாலான் இந்த விசயத்தை ஏன் டெல்லி,அல்லது மாநில அளவில் கொண்டு செல்லவில்லை. தற்போது இந்த சம்பவத்தில் அவரின் ஆதரவு எந்த அளவு உள்ளது ?  
  • உண்மையில் ராமகோபாலன் போன்றோருக்கு நம் இனத்தின் மீது பரிவு இருகிறதா ? திருச்சி RV அரெஸ்ட் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் நம் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாகவும்,
  •  நம் ரத்த உறவுகளான மீனவர்கள் சிங்கள கடற்படையால் கொல்லப்படுவதைப் பற்றியும் இவர்களின் நிலை என்ன?மேலும் பல ஊர்களில் நம் மக்கள் கோவில் வழிபாடுகளில் கள்ளர், தேவர் இனத்தவரால் ஒதுக்கப்பட்டும்,தாக்குதலுக்கு உள்ளாகும் போது நமக்கு இதுபோல உதவி செய்கிறார்களா?
  • இந்த பிரச்சனை இந்து முஸ்லிம் சம்மந்த பட்டதால், பக்கத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த வேளாளர்,கள்ளர், தேவர் மக்கள் நமக்கு நேரடியாக உதவி செய்கிறார்களா ? அல்லது அந்த இனத்தை சேர்ந்த( தமிழகத்தில் அதிக எண்ணிக்கை உள்ள போலீஸ் அதிகாரிகள் நமக்கு உதவி செய்வர்களா ? 
  • 12 ஆண்டுகளாக இருக்கும் இந்த பிரச்னையை தீர்க்காமல் இருபதற்கு முஸ்லிம் மட்டும் தான் காரணமா அல்லது மத்த இந்து சாதி அமைப்புகளும் உடந்தையா? 
  • இதனால் நம் மக்கள் இழந்த பொருள், தொழில் வாய்ப்புகள் ?வேலை வாய்ப்புக்களுக்கு யார் பொறுப்பேற்பது ? 
  • பலம் இல்லாத நம்மை மோதவிட்டு யார் ஆதாயம் பெறுகிறார்கள் ?
  • AV மற்ற இந்து  இனத்தவரால் திடமிட்டு கொல்லப்பட்ட படம் 
                                               நமது இனத்தவர் படிக்க 09/02/1948 வருடம் ஆரம்ப பாடசாலை திறப்பு விழ                  நடத்தியபோது.நம்மவர்கள் படிக்க கூடது என்று மற்ற ஹிந்து  சமூகத்தினர் தாக்கியபோது.அதனால் பதிக்கப்பட்ட பாடம் நடத்த சென்ற ஆசிரியர்களும், பொதுமக்கள்(பெண்களை கூட),மற்றும் இதை ஆரம்பிக்க உதவிய பெரியோர்கள் ஆஸ்பத்திரிஇல் இருந்தபோது எடுத்தபடம்...(10/02/1948)
  •  நாம் சிந்திக்கவேண்டிய பல கேள்விகள் பாவப்பட்ட ஆதரவற்ற,,,வெறும் ஒட்டு போடும் இயந்திரமாக உள்ள நம்மிடம் கேள்விகளாக மட்டும் இருக்கிறது...ஒரு சில கேள்விகளுக்கு புதிய பதிலும், பலவற்றுக்கு நாம் அனைவரும் அறிந்த ஒரே பதில் தான்....சிந்திப்போம் ஒற்றுமையை வளர்ப்போம்.... ..நீண்டகால திட்டத்துடன் புதிய வருங்காலத்தை படைப்போம்.. http://www.facebook.com/groups/mutharaiyar/      


இந்த கட்டுரை ஒரு குழுவாக விவாதித்து எழுதியது.மேலும் தனிப்பட்ட தொக்களிகாடு என்ற கிராமத்தை பற்றியது அல்ல...அதலால் அந்த கிராமத்தை பற்றி தனிப்பட்டு விவாதிக்க வேண்டாம்.தற்போது பெரும்பாலான பகுதியல் நாம் மதரீதியான பிரச்சனைள் சிக்கியவைகபடுகிறோம்..சாதி ரீதியல் உள்ள பிரச்சனைகளில் நாம் இன்னும் வெற்றிபெற முடியவில்லை இந்த நிலையல் மத ரீதியான prachanaiel நாம் எப்படி வெற்றிபெற போகிறோம் என்ற ஆதங்கத்தில் எங்களுக்கு தெரிந்த கருத்துகளை எழுதியுள்ளோம். உங்களின் நல்ல கருத்துகளை அனுபினால் இதில் சேர்த்து கொள்ளப்படும்...http://www.facebook.com/groups/mutharaiyar/
 தமிழகத்தின் அயோத்தி தொக்காலிக்காடு
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ளது தொக்காலிக்காடு என்ற சிரிய கிராமம். அதிவீரராமபட்டினத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள காவிரியின் கடைமடை பகுதியான இந்த கிராமத்தில் சுமார் 400 ஹிந்து குடும்பங்கள் வசிக்கின்றன. 100 சதவிகிதம் ஹிந்துக்கள் வசிக்கும் தொக்காலிக்காடு கிராம மக்கள், முஸ்லீம்களால் கடந்த 12 ஆண்டுக்காலமாக அனுபவித்து வரும் பலவிதக்கொடுமைகளை கேட்
டால் கலங்காத கண்ணும் கலங்கும். கல் நெஞ்சும் கரைந்துவிடும்.

அதிவீரராமபட்டினம் பேரூராட்சின் அன்றைய துணைத்தலைவராக இருந்தவர் M.M.S.அப்துல் வஹாப். இவர் தொக்காலிக்காடு கிராம எல்லையில் ஸ்ரீ முனீஸ்வரர் கோவிலுக்கு அருகில் சர்வே எண்-153.1 ல் உள்ள 6.96 ஏக்கர் நிலத்தை 1977 ல் இருந்து படிப்படியாக ஆக்கிரமித்து தனது கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டு வந்துவிட்டார். அப்துல் வஹாப்பால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இந்த 6.96 ஏக்கர் நிலத்தில்தான் தொக்காலிக்காடு சுடுகாட்டிற்க்கு சொந்தமான பெத்தான் குளம் இருந்தது. அரிஜனங்கள் உள்ளிட்ட அனைத்து ஹிந்து சமூகத்தினருக்கும் பொதுவானது இந்த சுடுகாடு. பினத்தை தஹனம் செய்துவிட்டு பெத்தான் குளத்தில் குளித்துவிட்டு வீடு திரும்புவது வழக்கம்.
இப்போது அந்த பெத்தான் குளம் தென்னந்தோப்புகளாகவும், மிகப்பெரிய மாட மாளிகைகளாகவும் மாறியுள்ளது. தொக்காலிக்காடு ஊராட்சிக்கு சொந்தமான சுமார் 2 கோடி மதிப்புள்ள இந்த 6.96 ஏக்கர் நிலத்தை ஏகபோகமாக அனுபவித்து வந்த அப்துல் வஹாப்பிற்கு தான் ஆக்கிரமிப்பு செய்த நிலத்தில் இருந்த ஸ்ரீ முனீஸ்வரர் கோவில் உறுத்தியது. ஒதியமரத்தடியில் ஒரு சூலாயுதத்துடன் கட்டிடம் ஏதும் இல்லாமல் இருந்த ஸ்ரீ முனீஸ்வரர் கோவிலை 05/05/1999 இரவோடு இரவாக அப்புறப்படுத்தினர் அப்துல் வஹாப்பும் அவரது பயங்கரவாத கும்பழும்.
மறுநாள் கோவில் இருந்த இடம் தெரியாமல் அப்புறப்படுத்தப்பட்டிருப்பதை பார்த்த தொக்காலிக்காடு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். முனீஸ்வரராய் தாங்கள் வழிபட்ட ஒதிய மரம் வேரோடு வெட்டி வீசப்பட்டிருந்ததை பார்த்த அவர்களின் மணம் கொதிப்படைந்தது. பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவரும், திமுக மாவட்ட பிரதினிநியுமான பி.ஜெயபால் தலைமையில் இதுபற்றி ஆலோசனை செய்தனர். 06/05/1999 அன்று ஸ்ரீ முனீஸ்வரர் கோவிலை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மீண்டும் அதே இடத்தில் கோவிலைக் கட்டக்கோரியும் போலீசில் புகார் செய்தனர்.

அப்போது தஞ்சை மாவட்ட எஸ்.பியாக இருந்த டாக்டர் ஜெயந்த் முரளி, ஹிந்துக்களும் முஸ்லீம்களும் அடங்கிய ஒரு அமைதிக் குழுவை அமைத்தார். இக்குழுக்களுக்கு இடையே அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. கோவிலை பெரிதாக கட்டக்கூடாது, முன்பிருந்த மாதிரிதான் இருக்க வேண்டும், திருவிழாக்களை விமரிசயாக கொண்டாடக்கூடாது, அதிக எண்ணிக்கையில் கிடா வெட்டக்கூடாது என முஸ்லீம்கள் நிபந்தனைகள் விதித்தனர். எங்கே கோவில் நம்மை விட்டு போய்விடுமோ என்ற அச்சத்தில் அந்த குள்ளநரிக் கயவர்களின் நிபந்தனைகளை ஏற்ப்பதாக உர்தியலித்தனர். அதன்படியே ஸ்ரீ முனீஸ்வரர் கோவிலை கட்டி , சுற்றிலும் இரும்பு வேலி அமைத்து வழிபட்டு வந்தனர்.
முனீஸ்வரர் கோவில் இருந்தால், தாங்கள் ஆக்கிரமித்த இடத்திற்கு என்றாவது ஆபத்து வரும் என்று நினைத்த முஸ்லீம் கயவர்கள், ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடைபெறும் நேரத்தில் பிரச்சினை செய்தனர். பணபலத்தினால் அதிகாரவர்கத்தை விலைபேசிவிட்ட ஆக்கிரமிப்பு கோஸ்டியினர் போலிசை ஏவிவிட்டனர். ஒருமுறை நள்ளிரவில் தொக்காலிக்காடு கிராமத்திர்க்குள் நுலைந்த நூற்றுக்கணக்கான போலீசார், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று பாராமல் வீடுபுகுந்து அடித்து துவைத்தனர். ஐம்பதிற்க்கும் மேற்ப்பட்ட ஆண்களையும் பெண்களையும் கைது செய்து மாதக்கணக்கில் சிறையில் அடைத்து கொடுமை செய்தனர்.

தொக்காலிக்காடு கிராமத்தில் நடக்கும் இந்த ஹிந்து விரோத கொடுமைகளை கேள்விப்பட்ட இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் வீரத்துறவி இராம.கோபாலன் அவர்கள் போலீசாரின் கடும் எதிர்ப்பையும் மீறி கடந்த 2000ம் ஆண்டில் அங்கு வந்தார். நிலைமையை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் முனீஸ்வரர் கோவிலில் தினமும் நான்கு பேர் உண்ணாவிரதமிருங்கள் என்று ஆலோசனை கூறினார். அவரது ஆலோசனையை ஏற்று மறுநாளே பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய முன்னாள் சேர்மன் ஜெயபால் மனைவியும், அவ்வூர் ஊராட்சிமன்ற தலைவியுமான திருமதி.செல்வராணி ஜெயபால் தலைமையில் நான்கு பெண்கள் உண்ணாவிரதம் இருக்கச்சென்றனர். அவர்களை கைது செய்ய 500 போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வண்டிகளுடனும், கண்ணீர்புகை குண்டுகள் வீசும் (வஜ்ரா) வாகனங்களுடன் காத்திருந்தனர். போலிசார் செல்வராணி உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர். 28 நாட்கள் சிறை வாசத்திற்க்கு பிறகே அவர்கள் வெளியே வரமுடிந்தது. தொடர்ந்து ஒரு வாரம் இந்த உண்ணாவிரதம் நடந்தது. ஒவ்வொரு நாளும் 500 போலீசார் காத்திருந்து ஏதோ மும்பை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளை கைது செய்வதுபோல் அகிம்சை வழியில் ஆக்கிரமிப்பை அகற்ற போராடியவர்களை கைது செய்தனர்.

தொக்காலிக்காடு ஊராட்சிமன்ற தலைவி திருமதி.செல்வராணி ஜெயபால் மாவட்ட ஆட்சி தலைவரின் ஆக்கிரமிப்பு அகற்றும் திட்டத்தின்கீழ் அப்துல் வஹாப் ஆக்கிரமித்துள்ள பெத்தான் குளத்தை 12/12/2005 அன்று மீட்கப்போவதாக அறிவித்தார். இதற்காக அன்றைய தினம் பஞ்சாயத்து ஊழியர்களுடனும், கிராம மக்களுடனும் அங்கு சென்ற அவர், ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த தென்னை மரங்களுக்கு இது பஞ்சாயத்திற்க்குச் சொந்தமானது என்பதற்கு அடையலமாக எண்களைக் குறித்தார். அப்துல் வஹாப் தூண்டுதலால் அங்கு குவிந்திருந்த போலீசார் தனது கடமையை செய்த பஞ்சாயத்து தலைவர் செல்வராணியை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தது. அவர் மீது கொலை முயற்சி(307) வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்தனர். மறுநாள் செல்வராணியின் கணவர் ஜெயபாலையும் கைது செய்து சென்னை மத்திய சிறையில் அடைத்தனர். கணவனும் மனைவியும் 350 கி.மீ இடைவெளியில் இரு நகரங்களில் 45 நாட்கள் சிறைபட்டு கிடக்க, அவர்களின் 3 பெண் குழந்தைகளும் பொங்கள் திருநாளைக்கூட அப்பா அம்மாவுடன் கொண்டாட முடியாமல் அனாதைகள் போல தவித்தனர்.

செல்வராணி அடைக்கப்பட்டிருந்த பெண்கள் சிறையின் வார்டனாக இருந்த ஒரு முஸ்லீம் பெண், முஸ்லீம்களையா எதிர்க்கிராய்? என்று தினமும் வார்த்தைகளால் அவரை இம்சித்திருக்கிறால். தங்கள் பஞ்சாயத்திற்கு சொந்தமான நிலத்தை மீட்பதற்காக செல்வராணியோடு தொக்காலிக்காடு ஊராட்சிமன்ற உறுப்பினர் புஷ்பவள்ளியும் சிறையில் 45 நாட்கள் பல சொல்லோனாத்துயரத்திற்கு ஆலாகியுள்ளார். கடைசியில் திருச்சிராப்பள்ளியில் தங்கியிருந்து தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில்தான் அவர்கள் ஜாமீனில் வரமுடிந்தது.

பணபலத்தாலும், அடியால் பலத்தாலும், அதிகாரத்தை வளைத்து முஸ்லீம்கள் நடத்தும் எல்லையில்லா அட்டூலியங்களை தொக்காலிக்காடு மக்கள் பல ஆண்டுகளாக அனுபவித்து வருகின்றனர். இவ்வளவு கொடுமைகளை அனுபவித்தாலும் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலையத்தையும், 6.96 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தையும் மீட்டேதீருவேன் என்கிறார் இந்த வீரப்பெண்மணி. திருமதி.செல்வராணியைப் போல ஒவ்வொருவரும் இருந்துவிட்டால் முனீஸ்வரர் கோவிலை மட்டுமல்ல, அயோத்தி ஸ்ரீ ராமர் கோயிலையும் கட்டிவிடலாம்.....

(குறிப்பு: பத்தடி இரும்பு வேலியாக உள்ள முனீஸ்வரர் கோயிலை ஹிந்துக்கள் விரிவுபடுத்தி, கட்டாமல் தடுப்பதற்காக 1999-லிருந்து 12 ஆண்டுகளாக 24 மணிநேரமும் அந்த இடத்தை போலீசார் பாதுகாத்து வருகின்றனர். ஆனால் கோயிலுக்கு அருகில் ஆக்கிரமிப்பு நிலத்தில் முஸ்லீம்கள் கட்டிவரும் பங்களாக்களை போலீசார் கண்டுகொள்வதில்லை.)

            நாம் இந்த செய்தியை வெளியிட்டதின் நோக்கம் இப்படி ஒரு பிரச்சனை இருப்பதோ அல்லது நடந்ததோ நாம் உறவுகளுக்கு பரவலாக தெரியவில்லை ,வேண்டுமானால் சங்கத்தில் உள்ளஉங்களை போன்றோர் மற்றும் சில அரசியல் கட்சியினருக்கு மட்டுமே தெரியும் .இதன் மூலம் மீண்டும் ஒரு சம்பவம் நடந்தால் அந்த ராமகோபாலன் போன்றோரின் உதவியின்றி நாமே மத்திய அல்லது மாநில அரசுகளுக்கு தெரியபடுத்தும் முயற்சியில் ஈடுபடலாம் அல்லவா ? இது மட்டும் அல்ல .பிற சமுகத்தால் தொல்லை ஏற்படும் பொழுது, நம் சமுகத்தில் யாரை அணுகவேண்டும் என்ற சரியான வழிகாட்டுதல்கள் இதுவரை இருபதாக தெரியவில்லை.ஆனால் இந்த முயற்சி நல்ல பலன் தரும் என்று நம்புகிறோம் வளரட்டும் உங்கள் தொண்டு.திரு Pjayapal Veer Muthurayar
http://www.facebook.com/groups/mutharaiyar/                           



 நம் சமுகம் மக்கள் தொகையல் அதிகமாகவும், 
அரசியல் மற்றும் பொருளாதார நிலையில்.அதிகம் தாக்கம் இல்லாமல் உள்ளோம்.தற்போது உள்ள அரசியல் கட்சிகளில் நமக்கு உள்ள செல்வாக்கு நாம் அறிந்ததே. 
        இந்த நிலையேல் தமிழகத்தில் செல்வாக்கு அதிகம் இல்லாத இந்து மத அமைப்பினர், தங்கள் அரசியல் வளர்சிக்கு.அதிக வாக்கு வங்கிகளை உடைய நம்மை குறிவைகிறார்கள்.இதற்காக ஒரு சில மாவட்ட பொறுப்புகளை நம் இனத்தவர்களுக்கு கொடுத்து நம்மை தன் வசபடுத்துகிறார்கள்.அதிகம் உணர்ச்சி களுக்கு தகுந்து, சிந்திக்காமல் முடிவு எடுக்கும் நாம் பல மதரீதியான பிரச்சனைகளில் மாட்டவைகபடுகிறோம்..
நாம் சிந்திக்கவேண்டிய பல வினாக்கள் நம் முன் உள்ளது.
1) நமக்கு உண்மையேல்  எதிரி யார்? முஸ்லிமா,கிறிஸ்தவர்களா 
2 ) அப்படி அவர்கள் தான் காரணம் எனில். எனில் நாம் இத்தனை  ஆண்டுகளாக அணைத்து துறைகளிலும் பின் தங்கி ஒடுக்கப்பட்டு வாழ்வதற்கு காரணம் யார்?
3) நம் வளர்ச்சில் இந்த அமைபினற்கு உண்மையான கரிசனம் இருக்கிறது என்று நம்புகிறீர்களா?
4) உள்ளூரில் சக இந்து (சாதி அமைப்புகளிடம்)அரசியல்,பொருளாதார நிலமையல் போட்டிபோட்டு வெற்றிபெற முடியாத நம்மால், இந்த மிகப்பெரிய அமைப்பு ரீதியான இவர்களிடம் வெற்றி பெறுவது எளிது என்று நம்புகிறீர்களா?
 நமது இனத்தவர் படிக்க 09/02/1948 வருடம் ஆரம்ப பாடசாலை திறப்பு விழ நடத்தியபோது.நம்மவர்கள் படிக்க கூடது என்று மற்ற சமூகத்தினர் தாக்கியபோது.அதனால் பதிக்கப்பட்ட பாடம் நடத்த சென்ற ஆசிரியர்களும், பொதுமக்கள்(பெண்களை கூட),மற்றும் இதை ஆரம்பிக்க உதவிய பெரியோர்கள் ஆஸ்பத்திரிஇல் இருந்தபோது எடுத்தபடம்...(10/02/1948)


5) நாம் சீரும் சிறப்பாக வாழ்ந்த நம் மன்னர்களின் காலத்தை, இருண்ட காலம் என்று ஒற்றை வரியல் சொல்லி.நம் இனத்தையே கல்வி அறிவு இல்லாமல் பல நூற்றாண்டுகள் விவசாய கூலிகளாக மாற்றிய இவர்களிடம், நாம் உண்மையான கரிசனத்தை எதிர்பார்க்க முடியுமா? 
..நமக்கு எதிரி நம் அறியாமை தான்...மற்ற இனத்தவர்கள் அல்ல? .சிந்திப்போம். சிந்திப்போம், உண்மையான சுய சிந்தனையுடன்,கல்வி அறிவுடன் பொருளாதார அரசியல் வளர்ச்சியை அடைவோம்...நல்ல மரியாதையைஇகு உரிய இந்துவாக வாழும் வாய்பு கிடைக்குமா, அதற்கு மத்த சாதி அமைப்பிலிருந்து உரிய அங்கீகாரம் கிடைக்குமா என்று முதலில் போராடுவோம்.
   வெறுமனே நம் மக்கள் உணர்ச்சி வசப்பட்டு, தங்கள் நிலையைத் தாழ்த்திக் கொள்வதை விட நம்முடைய நிலையை உயர்த்திக்கொள்ள நாம் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆய்வு செய்வோம். 
             இப்படிக்கு முத்தரையர் ஷேரிங் குரூப் நண்பர்கள் அமைப்பு 


No comments:

Post a Comment