வேட்டுவ மன்னன் "வல்வில் ஓரி"..
பாடியவர் : வண்பரணர்.
பாடப்பட்டோன்: வல்வில் ஓரி.
திணை: பாடாண். துறை: பரிசில் விடை.
சிறப்பு: ஓரியது பெருமித நிலையின் விளக்கம்; அவன் வேட்டுவக் குடியினன் என்பது.( பரிசில் பெற்ற புலவர், அவனை வியந்து பாடியது இச் செய்யுள்)`வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழிபேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇப்,புழல்தலை புகர்க்கலை உருட்டி, உரல்தலைக்கேழற் பன்றி வீழ, அயலதுஆழற் புற்றத்து உடும்பில் செற்றும்,வல்வில் வேட்டம் வலம்படுத் திருந்தோன்,புகழ்சால் சிறப்பின் அம்புமிகத் திளைக்கும்கொலைவன் யார்கொலோ? கொலைவன் மற்று இவன்விலைவன் போலான்: வெறுக்கைநன்கு உடையன்:ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின்,சாரல் அருவிப் பயமலைக் கிழவன்,ஓரி கொல்லோ? அல்லன் கொல்லோ?பாடுவல், விறலி! ஓர் வண்ணம்; நீரும்மண்முழா அமைமின் ; பண்யாழ் நிறுமின் ;கண்விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின்:எல்லரி தொடுமின் ; ஆகுளி தொடுமின்;பதலை ஒருகண் பையென இயக்குமின்;மதலை மாக்கோல் கைவலம் தமின்` என்று,இறைவன் ஆகலின், சொல்லுபு குறுகி,மூவேழ் துறையும் ழுறையுளிக் கழிப்பிக்,`கோ`வெனப் பெயரிய காலை, ஆங்கு அதுதன்பெயர் ஆகலின் நாணி, மற்று, யாம்நாட்டிடன் நாட்டிடன் வருதும் ; ஈங்கு ஓர்வேட்டுவர் இல்லை, நின் ஒப் போர்` என,வேட்டது மொழியவும் விடாஅன், வேட்டத்தில்தான் உயிர் செகுத்த மான் நிணப் புழுக்கோடு,ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கித்,தன்மலைப் பிறந்த தாவில் நன்பொன்பன்மணிக் கு வையடும் விரைஇக், `கொண்ம்` எனச்,சுரத்துஇடை நல்கி யோனே : விடர்ச் சிமைஓங்குஇருங் கொல்லிப் பொருநன்,ஓம்பா ஈகை விறல்வெய் யோனே!
புறநானூறு 152 வல்வில் ஓரி
வல்வில் ஓரி கொல்லிப் பொருநன் என்று சிறப்பிக்கப்பட்டுள்ளான். அவன் தனக்கு எங்கே எவ்வாறு பரிசளித்தான் என்பதைப் புலவர் வன்பரணர் நிரல்பட விளக்குகிறார்.
ஓரியின் வல்வில் வேட்டம்
ஓரி அம்பு எய்தான்.முதலில் அது யானையை வீழ்த்தியது. அடுத்து உழுவைப்புலியைச் சாகடித்தது. அடித்து மானை உருண்டுவிழச் செய்த்து. அடுத்து முள்ளம்பன்றியை வீழ்த்தியது. இறுதியாகப் புற்றிலிருந்த உடும்பின் உடலில் தைத்துக்கொண்டு நின்றது.
இப்படிக் கொன்றவன் விற்பனைக்காக எய்ததாகத் தோன்றவில்லை. வெறுக்கத்தக்க மிகுதியான செல்வம் உடையவனாகத் தென்படுகிறான். அவன் மார்பில் முத்தாரம் இருக்கிறது. ஓரியாக இருப்பானோ? எப்படியாயினும் ஆகட்டும்.
இசைமுழக்கம்
விறலியரே! நாம் பாடுவோம். முழவை முழக்குங்கள். யாழை மீட்டுங்கள். தூம்புப் பறையைக் களிற்று முழக்கம் போல ஊதுங்கள். எல்லரி தட்டுங்கள். ஆகுளி என்னும் உடுக்கை அடியுங்கள். பதலை என்னும் பானைக்கடம் தட்டுங்கள். மதலை என்னும் மாக்கோலை வலத்தோளில் உயர்த்திப் பிடியுங்கள். இசையின் 21 துறைகளிலும் முறையாகப் பாடுங்கள். - என்றார்.
அப்படியே அனைவரும் பாடினர்.
இறுதியில் "கோ" எனக் கூட்டிசை முழக்கம் செய்தனர். 'கோ' என்பது அரசனைக் குறிக்கும் சொல் ஆதலின் ஓரி தன்னைக் கண்டுகொண்டதாக எண்ணி நாணித் தலைகுனிந்தான்.
புலவர் புகழுரை
இங்கு உன்னைப்போல் சிறந்த வேட்டுவர் இல்லை. உன் நாட்டுக்கு வருகிறோம் என்றார்.
சுரத்தில் கொடை
தான் வேட்டையாடிய மானைச் சுட்டுக் கொடுத்தான். தொட்டுத் தின்ன தேனும் கொடுத்தான். தன்னிடமிருந்த மணிகெஉவிலையெல்லாம் கொடுத்தான். இவன் ஈகை தனக்கென எதையும் வைத்துக்கொள்ளாத 'ஓம்பா ஈகை'

No comments:
Post a Comment