முத்தரையர்கள் (சு.கி.பி. 650- சு.கி.பி. 860)
குறுநில மன்னருள் தலைசிறந்து விளங்கியவர்கள் முத்தரையர்கள்.
முத்தரையர்கள், களப்பிர குலத்தைச் சார்ந்தவர்களெனச் சிலர் கருதுகின்றனர். ஆனால், அதற்குப் போதிய சான்றுகள் இல்லை. அவர்கள் பல்லவப் பேரரசுக்கு உட்பட்டுத் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, பழைய புதுக்கோட்டை சமஸ்தானம் ஆகிய நிலப்பகுதியை ஆண்டுவந்தனர். திருக்காட்டுப்பள்ளிக்கு அண்மையில் இப்போது ஒரு சிற்றூராகக் காட்சியளிக்கும் செந்தலை என்பது முத்தரையர் ஆட்சியில் சந்திரலேகா என்ற அழகிய பெயரில் அவர்களுடைய தலைநகராகச் செயல்பட்டு வந்தது. பாண்டியரோடும் சோழரோடும் பல்லவர்கள் போர் புரிந்த போதெல்லாம் முத்தரையர்கள் பல்லவருக்குத் துணைநின்று வெற்றிகாண உதவியுள்ளனர்.
முத்தரையருள் முதன்முதல் கல்வெட்டுகளில் நாம் அறிந்து கொள்ளும் குறுநில மன்னன் பெரும்பிடுகு முத்தரையன் என்பான் ஆவான். செந்தலைக் கல்வெட்டில் இவன் பெயர் காணப்படுகின்றது. இவன் கி.பி. 655-680 ஆண்டுகளில் வாழ்ந்திருந்தவன்; முதலாம் பரமேசுவரவர்மன் காலத்தவன். இவனையடுத்து இவன் மகன் இளங்கோவடியரையன் என்கிற மாறன் பரமேசுவரன் (கி.பி. 680-சு. 705) என்பவனும், அவனையடுத்து அவன் மகன் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையன் என்கின்ற சுவரன் மாறன் (சு.கி.பி.705-சு. 745) என்பவனும் அரியணை ஏறினர். சுவரன்மாறன் இரண்டாம் பரமேசுவரன், இரண்டாம் நந்திவர்மன் காலத்தவன்; பிந்திய பல்லவ மன்னனுடன் நட்புப் பூண்டிருந்து அவனுக்குப் பெருந்துணையாக நடந்து கொண்டான். பாண்டியன் முதலாம் இராசசிம்மன் இரண்டாம் நந்திவர்மனைத் தாக்கிப் பல இடங்களில் போர் தொடுத்து நெருக்கிக் கொண்டிருந்தபோது பல்லவ மன்னனின் படைத்தலைவனான புகழ்பெற்ற உதயசந்திரன் பல்லவனுக்குத் துணையாகப் போரில் நுழைந்து அவனைக் கடும் முற்றுகை ஒன்றினின்றும் விடுவித்ததுமன்றி மேலைச் சளுக்கரையும் தொண்டை மண்டலத்தை விட்டு விரட்டினான்.
இந்த நெருக்கடியில் சுவரன்மாறன் முத்தரையன் பல்லவனுக்கு ஆற்றிய பணி மிகப் பெரிதாகும். அவன் பாண்டியரையும் சேரரையும் கொடும்பாளூர், மணலூர், திங்களூர், காந்தளூர், அழுந்தியூர், காரை, மறங்கூர், அண்ணல்வாயில், செம்பொன் மாறி, வெங்கோடல், புகலி, கண்ணனூர் ஆகிய இடங்களில் போரிட்டு வென்றான் என்று செந்தலைக் கல்வெட்டுக் கூறுகின்றது. வேள்விக்குடிச் செப்பேடுகள் இவற்றுள் கொடும்பாளூர்ப் போர் ஒன்றினையே குறிப்பிடுகின்றன; அதிலும் அப்போரில் பாண்டியனே வெற்றி கொண்டதாகவும் கூறுகின்றன. எனினும், போர் நடந்ததற்குச் சான்று ஒன்று உள்ளதால் முத்தரையன் ஏதேனும் ஒரு போரில் வெற்றி கண்டிருப்பான் என்பதில் ஐயமில்லை.சுவரன்மாறனுக்குச் சத்துருகேசரி, அபிமானதீரன், கள்வர்கள்வன், அதிசாகசன், ஸ்ரீதமராலயன், நெடுமாறன், வேள்மாறன் முதலிய விருதுப் பெயர்கள் உண்டு.
சுவரன்மாறனை அடுத்து விடேல் விடுகு விழுப்பேரடி அரசன் என்ற சாத்தன்மாறன் (சு.கி.பி. 745-சு.770) முடிசூட்டிக் கொண்டான். இவன் சுவரன்மாறனின் மகன் என்று கொள்ளுவதற்குச் சான்றுகள் உள்ளன. பல்லவ மன்னரும் ‘விடேல் விடுகு’ என்ற விருதைத் தாங்கி வந்திருப்பது இங்குக் குறிப்பிடத் தக்கதாகும். இம் முத்தரையன் காலத்தில் நெடுஞ்சடையன் பராந்தகன் என்ற பாண்டிய மன்னன் பெண்ணாகடத்தில் பல்லவரை முறியடித்துச் சோழர்மேல் பெரும் வெற்றியொன்றைக் கொண்டான். இப்போரில் முத்தரையர்கள் பங்கு கொண்டதும் கொள்ளாததும் விளங்கவில்லை.
அடுத்துப் பட்டத்துக்கு வந்தவன் மார்ப்பிடுகு பேரடியரையன் (சு.கி.பி.770-791) என்பான். இவன் விடேல்விடுகு விழுப்பேரடி முத்தரையனுடன் எவ்வகையான உறவு பூண்டவன் என்பது தெரியவில்லை. இவன் நந்திவர்ம பல்லவனின் உடன் காலத்தவன். இவன் ஆட்சியின்போது பாண்டியன் நெடுஞ்சடையன் இரண்டாம் முறையும் சோழ நாட்டின்மேல் படையெடுத்துவந்து ஆயிரவேலி, அயிரூர், புகழியூர் என்ற இடங்களில் கொங்கு மன்னன்மேல் வெற்றி கொண்டான். இப்போர்களில் கொங்கு மன்னனுக்குப் பல்லவரும், சேர மன்னரும் துணை நின்றனர். பல்லவர் தோல்வியுற்றுத் தம் காவிரிக்கரை நாடுகளை இழந்தனர். இப் போர்களில் இம்முத்தரைய மன்னன் கலந்துகொண்டதும், கொள்ளாததும் தெரியவில்லை. ஆலம்பாக்கத்தில் ‘மார்ப்பிடுகு ஏரி’யைக் கட்டினவனும், திருவெள்ளறையில் ‘மார்ப்பிடுகு பெருங்கிணறு’ தோண்டியவனும் இவனேயாவான்.
மார்ப்பிடுகு முத்தரையனையடுத்து விடேல்விடுகு முத்தரையன்
குவாவன்சாத்தன் (சு.கி.பி. 791-826) பட்டமேற்றான். இவன் பாண்டியனின் மேலாட்சிக்குட்பட்டிருந்தவன் என மாறன் சடையனின் செந்தலைக் கல்வெட்டினின்றும்13 ஊகிக்கலாம். பாண்டியர் நெடுநாள் காவிரிக்கரையில் ஆட்சி புரியவில்லை. அதைவிட்டு அவர்கள் விலகிய பிறகு முத்தரையர் முழு உரிமையுடன் அரசாளத் தொடங்கினர்.
விடேல்விடுகு முத்தரையன் குவாவன்சாத்தன் மகன் சாத்தன் பழியிலி என்பான் (சு. கி. பி. 826-851) தன் தந்தைக்குப் பிறகு அரசு கட்டில் ஏறினான். இவன் கற்றளி ஒன்று குடைவித்தான் என்று நார்த்தாமலைக் கல்வெட்டு ஒன்று கூறுகின்றது. சாத்தன் பழியிலிக்குப் பெரும்பிடுகு, விடேல்விடுகு, மார்ப்பிடுகு போன்ற விருதுகள் அக் கல்வெட்டில் காணப்படவில்லை. எனவே, சாத்தன் பழியிலி பல்லவரின் மேலாட்சியினின்றும் விடுதலை வெற்றிருக்கவேண்டும் என்று ஊகிக்க இடமேற்படுகின்றது. இவனுடைய ஆட்சியில்தான் சோழ மன்னன் விசயாலயன் தஞ்சையை முத்தரையரின் பிடியினின்றும் விடுவித்துக் கொண்டான். பல்லவர்கள் அப்போது முத்தரையருக்குத் துணைநின்றதாகச் சான்றுகள் இல.
புதுக்கோட்டைப் பகுதியில் நிருபதுங்க பல்லவன் தன் ஆட்சியை விரிவுபடுத்தியபோது மீண்டும் வழக்கம்போல் முத்தரையர் பல்லவருக்குத்தாழ்ந்து வந்திருந்தனர். மெல்ல மெல்லச் சோழர் புதுக்கோட்டைப் பகுதியின்மேல் தம் செல்வாக்கைச் செலுத்தலானார்கள்; நார்த்தாமலையில் விசயாலய சோழீசுவரம் என்ற சிவன் கோயில் ஒன்றை எழுப்பினர். முதலாம் ஆதித்த சோழன் கொடும்பாளூர்க் குறுநில மன்னரிடம் பெண்கொண்டான். திருப்புறம்பயம் போருக்குப் பிறகு பாண்டியரின் செல்வாக்குக் குன்றிவந்தது. எனவே, முத்தரையர் சோழருடைய மேலாட்சிக்குத் தலைகுனியலானார்கள் என்று கொள்ளலாம். களப்பிரரைத் தொடர்ந்து முத்தரையர் சோழப் பேரரசு ஒன்று வளர்வதற்குப் பெருந் தடையாக இருந்து வந்தனர். அவ்வப்போது பல்லவர், சோழர், பாண்டியர் ஆகியவர்களுடன் மாறி மாறிக் கூட்டுறவு மேற்கொண்டதாலும், தனித்து நின்று தமக்கெனச் சுதந்தர உரிமைகள் தேடிக் கொள்ளாததாலும் முத்தரையரின் கை சாய்ந்துவந்தது. முத்தரையர் சோழரிடம் தோல்வியுற்றுத் தஞ்சையைக் கைவிட்டதும் பல்லவருக்கும் சோழருக்கும் இடையே இருந்த தடைகள் நீங்கின; சோழர்கள் பல்லவரின் மேல் நேருக்கு நேர் பகை நடவடிக்கைகள் மேற்கொள்ளுவதற்கு வாய்ப்பும் ஏற்றங்கண்டது.
முத்தரையர் சைவ, வைணவ சமய வளர்ச்சிக்கு உதவிவந்தனராயினும் சமண சமயத்துக்கும் பேராதரவு காட்டி வந்தனர். முத்தரையர் காலத்தில் இயற்றப்பட்ட நாலடியார் நூலில் காணப்படும் குறிப்புகள் இதனைத் தெரிவிக்கின்றன. தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் முத்தரையர் துணை புரிந்து வந்தனர். அவர்களுடைய அரசவையில் பல தமிழ்ப் புலவர்கள் அமர்ந்திருந்தனர். பாச்சில்வேள் நம்பன், ஆசாரியர் அநிருத்தர், கோட்டாற்று இளம்பெருமானார், பவடாயமங்கலம் அமருந்நிலை என்பார் அவர்களுள் சிலர். இப் புலவர்களின் பாடல்கள் செந்தலையில் உள்ள சுந்தரேசுவரர் கோயில் தூண்களின்மேல் செதுக்கப்பட்டுள்ளன. இப் பாடல்கள் வெண்பா, கட்டளைக் கலித்துறைச் சீர்களில் இயற்றப்பட்டுள்ளன. அமிதசாகரர் இயற்றிய யாப்பருங்கலவிருத்தியில் (கி.பி. 10ஆம் நூற்றாண்டின் இறுதி) தமிழ் ‘முத்தரையர் கோவை’ என்னும் நூலைப் பற்றிய குறிப்புக் காணப்படுகின்றது. அந்நூல் இப்போது கிடைக்கவில்லை.
முத்தரையர்கள் கோயில் கட்டுவதிலும், கற்றளிகள் குடைவதிலும் தம் நோக்கத்தைச் செலுத்திவந்தனர். சாத்தன் பழியிலி என்ற முத்தரைய மன்னன் பழியிலீசுவரம் குடைவித்தான். அவனுடைய மகள் அதற்கு முகமண்டபம், பலிபீடம், நந்தி இடபமண்டபம் ஆகியவற்றை அமைத்துக் கொடுத்தாள். திருமயம் தாலூக்காவில் பூவனைக்குடி என்ற இடத்தில் குடையப்பட்டுள்ள புஷ்பவனேசுரர் கோயில் பூதி களரி அமரூன்றி முத்தரையன் அமைத்ததாகும். தேவர்மலைக் கற்றளியும் முத்தரையர் செதுக்கியதே எனக் கருதுவர்.

வீரமான வம்சம்..
ReplyDelete