நாலடியாரில் முத்தரையரை பற்றி குறிப்புகள்:
கி.பி. 7ஆம் நூற்றாண்டில் சைவ சமய பக்தி இயக்கத்தின் எழுச்சியால் பாண்டிய நாட்டில் சமண சமயம் வீழ்ச்சியடைந்தது. ஆனால், கி.பி. 8ஆம் நூற்றாண்டில் மதுரையைச் சுற்றியுள்ள எண் பெருங்குன்றங்களிலும் மீண்டும் சமணம் உயிர்த்தெழுந்தது. அத்தகைய நிலையில்தான் நானூறு பாடல்கள் கொண்ட நாலடியார் தோன்றிற்று. எண் பெருங்குன்றத்துச் சமண இருடியர்தாம் இப்பாடல்களை இயற்றினர் எனக் கருதப்படுகிறது.
இந்நூலுள் இரு பாடல்களில் (பா. 200, 296) பாண்டியரின் கீழ்ச் சிற்றரசர்களாகப் புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர்ப் பகுதிகளை ஆண்ட பெருமுத்தரையர் குறிப்பிடப்படுகின்றனர்.
பா. 296இல், செல்வர்களிடம் சென்று பிச்சை ஏற்காமல் தன்மானத்துடனும் சுயமுயற்சியுடனும் வாழ்வோர்க்கு முன்மாதிரியாகப் பெருமுத்தரையர் குறிப்பிடப்படுகின்றனர்.
சிங்கம்புணரிப் பகுதியிலுள்ள மேலைச் சிவபுரி, மிதிலைப்பட்டியை உள்ளடக்கிய பூங்குன்ற நாட்டுத் தலைவனான பூங்குன்ற நாடன் பெயர் பா. 128, 212 ஆகியவற்றில் முன்னிலை விளித்தொடராகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நாலடியாரை இயற்றிய சமண முனிவர்கள் இவ்விருவரின் அரசியல் ஆதரவுடன் செயல்பட்டனர் என எண்ணுவதற்கு இடமுண்டு.
இந்த இடத்தில், நாலடியாரில் இடம்பெற்றுள்ள ஒரு குறிப்பு மிகுந்த முதன்மை பெறுகிறது. எந்தப் பெருமுத்தரையர் நாலடியாரின் போற்றுதலைப் பெற்றாரோ, அதே பெருமுத்தரையரால் மனமுவந்து அளிக்கப்பட்டு அவர்களின் ஈகைக் குணத்துக்கும் விருந்தோம்பல் பண்புக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த புலால் சோறு ஒரு பாடலில் (பா. 200) பழிக்கப்படுகிறது.
200. பெருமுத் தரையர் பெரிதுவந் தீயும்
கருனைச்சோ றார்வர் கயவர் - கருனையைப்
பேரும் அறியார் நனிவிரும்பு தாளாண்மை
நீரும் அமிழ்தாய் விடும்.
பொருளுரை: ஈகையிற் சிறந்த பெருமுத்தரைய ரெண்னுஞ்ச சிறப்புப் பெயருடையார் சிறிதும் வெறுப்பின்றி ஈகின்ற பொரியலோடு கூடிய சோற்றை உண்பர் கீழ்மக்கள், அப் பொறிக் கரியைப் பெயரினாலும் அறியாதவராய் மிகுதியும் விரும்பிச் செய்கின்ற முயற்சியார் கிடைத்த சோற்றோடு கூடிய நீரும் அமுதம் போல அவருக்குச் சுவையுடையதாகவே இருக்கும்.
விளக்கவுரை: இச் செய்யுள் செய்த ஆசிரியர் காலத்துப் பெருஞ்ச செல்வத்தினராய் ஈகையிற் சிறந்த ஒருவர் இருந்தனராக வேண்டும்; அவருடைய கொடைச் சிறப்புப்பற்றி அவருக்குப் பெரு முத்தரையரஎனச் சிறப்புப் பெயர் வழங்கியப்போதும் இப்பெயர் முப்பதாம் அதிகாரத்தில் ஆறாவது செய்யுளில் கூறுதல் காண்க: சொற்குப் பொருள் சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு ஆகிய பெரிய மூன்று நிலங்களுக்கும் தலைவர் என்பது சோற்றோடு கூடிய நீரை மிகுதி பற்றி நீர் என்றனர். "நீருண்டார் நீரன்வாய்ப் புசுப" என்பதில் முதலில் உள்ள நீர் இப்பொருள் படல் காண்க.
English: The base ones feed on the rice combined with savoury dishes, given with a generons heard by the lords of the triple land (of Sera,Sola and Pandiya), Even water obtained by the persevering toil of those who do not know of savoury dishes even by name, will taste like nectar to them.
296. மல்லன்மா ஞாலத்து வாழ்பவ ருள்ளெல்லாம்
செல்வ ரெனினும் கொடாதவர் நல்கூர்ந்தார்
நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே,
செல்வரைச் சென்றிரவா தார்.
பொருளுரை: வளப்ப மிக்க பெரிய பூமியில் செல்வமுடையார் ரில்லேலாம் சிறந்த செல்வராயினும் அறத்தின் பொருட்டுக் கொடுக்கும் தன்மை இல்லாதவரே வறியவர், வறுமை யடைந்திருப்பினும் குறிப்பறிந்து தீயாத செல்வரிடத்துப் போய் இரக்குந்த் தன்மையில்லாதவரே பெருமுத்தரையோரோடு ஒத்த செல்வர்.
விளக்கவுரை:
பெருமுத்தரையரே என்னும் பிரிநிலை ஏகாரத்தைக் கொடாதவர், இரவாதவர் என்பவற்றோடு கூட்டுக. செல்வமுடைமையின் பயனெய் தாமைபற்றிக் கொடாதவரே வறிஞர் ரென்றும், மறுக்குன்ச் செல்வர் னென்று கூறினர் இரண்டனுருப்பை எழாவதக்குக....
No comments:
Post a Comment