Showing posts with label Mutharaiyar Area வாழும் இடம். Show all posts
Showing posts with label Mutharaiyar Area வாழும் இடம். Show all posts

மன்னரின் சதய விழா..புகைப்படங்கள்

நமது மன்னரை  பற்றி பெருமைபட பல வரலாற்று சான்றுகள் உள்ளது.. அவரை கும்பிட்டு வேண்டுவதைவிட....அவரை பார்த்து வீர வணக்கம் செய்து சபதம் எடுப்போம்.. நமக்கு அரசியல் அதிகாரம் வேண்டும் உன் மேல் ஆணையாக வென்று எடுப்போம் ......1000 ஆண்டுகளுக்கு முன்னால் உன்னால் இந்த தேசத்தை ஆள முடியும் போது எங்களால் முடியாத என்று வீர சபதம் எடுப்போம்.

மேலும் இந்த மாதம் முழுவதும் மன்னரின் புகழ் பாடும் மாதமாக எடுத்துக்கொண்டு....மாதம் முழுவதும் அணைத்து மாவட்ட ,வட்டார தலைநகர்களில் இது சம்பந்தமான நிகழ்சிகள் (நாடகம் .கலைநிகழ்ச்சி,பேச்சு போட்டி,விளையாட்டு போட்டிகள் நடத்தவேண்டும்). நமது வேற்றுமைகளை மறந்து மன்னரின் பெயரால் அனைவரும் இணைந்து செய்யப்படவேண்டும்...

அவரது அதிகாரம், அவரது ஆட்சி காலத்தில் எப்படி தமிழ் மொழியும் பண்பாடும் மக்களும் சிறப்பாக எப்படி இருந்தார்கள்..என்ற பல வரலாற்று கட்டுரைகளை படைக்கவேண்டும்.

ஏன் அவர் புகழ் பாடவேண்டும் என்ற நம் மக்களுக்கு புரியவைக்கவேண்டும்...அதன் மூலம் நம் மக்களுக்கு நம்பிக்கையை ம்( நாம் ஆண்ட சமுகம் தான் நம்மாலும் சிறப்பாக மற்ற சமுகத்தை வழிநடத்தமுடியும் என்ற நம்பிக்கையை) உண்டாக்கவேண்டும.

மேலும் இந்த விழா நம்மின் வரலாற்றை நாம் தெரிந்துகொள்ளவும்.மற்ற சமூகத்தினர் நம்மை பற்றி அறிந்துகொள்ள என்பதை நினிவில் கொண்டு .. மற்ற இனத்தவர்களுக்கு இடையுறு இல்லாமல் நடந்துகொள்வோம்.......http://www.facebook.com/groups/mutharaiyar/














முத்துப்பேட்டையும் முத்தரையரும்











காவேரி டெல்டாவின் கடலோரத்தில் உள்ள முத்துப்பேட்டையை சுற்றிலும் சுமார் பதினோரு கிராமங்களில் நாம்அருதி பெரும்பான்மையுடன் வாழ்கிறோம் எனக்கு தெரிந்த விவரப்படி.ஆனாலும் எழுபதுகளுக்கு முன் யாரும் எந்த அரசியல் சார்ந்தபொறுப்புகளையும் வகித்ததாக தெரியவில்லை .
மறைந்த .திரு .வீ .நடேசன் அவர்களை தவிர ,அடக்குமுறைகள்கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த அந்த காலகட்டத்தில் ,ஆலங்காடு ஊராட்சிமன்ற தலைவராக இருந்து உள்ளுரில் கோலோச்சி வந்த பார்ப்பனபண்ணையாராலும் ,சுற்று வட்டாரத்தில் செல்வாக்குடன் இருந்த தேவர்இனத்தவராலும் நிகழும் கொடுமைகளுக்குஎதிராக பொதுஉடமைஇயக்கத்தின் துணையோடு போராடினாலும் முழு தீர்வை எட்டமுடியாமல் இருந்துள்ளனர்பின்னர் 1971 ஆம் ஆண்டு நடை பெற்றதேர்தலில் ஒன்றியப்பெருந்த்லைவர் பொறுப்பிற்கு பொதுஉடமைஇயக்கத்தின் சார்பாக போட்டியிட்டு வென்றுள்ளார் .இவர் பொறுப்பு வகித்தகாலத்தில் குறிப்பிடத்தக்கவை ஒரு சில ஆலங்காடு தொடக்கப் பள்ளியை,நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்தியது ,பேட்டையில்(புதுக்கோட்டகம்சாலைசாலை வசதியில்லாமல் அவதி பட்ட நம் இனத்தவருக்கு சாலைஅமைத்து கொடுத்ததுகற்பகநாதர் குளம் பகுதியில் படித்து இருந்த நம்சமுதாய இளையோர்களை ஆசிரியர்களாக பனி நியமனம் செய்தது.இவருக்குப்பிறகு நம் இன வாக்குகள் பெரும்பான்மையாக இருந்தாலும்அடுத்து நடைபெற்ற தேர்தலில் யாருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.ஊராட்சி மன்ற தலைவராக ஆலங்காடு .திரு A . சந்திரன் போன்ற ஒருசிலரே இருந்தனர் .மற்றைய கிராமங்களில் தேவர் இனத்தவரே நம்மக்களின் வாக்குகளை கொண்டு பதவி வகித்தனர் .இன்று நம்மவர்கள்பெரும்பாலும் வகித்து வரும் ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பே பெரியகனவாக இருந்துள்ளது .நம்மவர்கள் யாரும் தேவர் இனத்தவரை மீறிதேர்தல்களை சந்திக்க முடியவில்லை .கடும் மிரட்டல்களும் ,சிலபடுகொலைகளும் நம் மக்களை அச்சம் கொள்ள வைத்தது .அந்தகாலகட்டத்தில் காரணம் தெரியாமல் இறந்தவர்களும் ,காணாமல்போனவர்களும் உண்டு .
இந்நிலையில் 1980 களில் முத்தரையர் சங்கம் இந்த பகுதியில் கவனம் செலுத்த தொடங்கியது .இதற்க்கு முன்னோடியாகவும் ,முழு காரணமாகவும் இருந்தவர்கள் .
ஆலங்காடு .திரு .எல் .எஸ். பாலசுப்பிரமணியன் அவர்கள் .முத்துபேட்டை பகுதியில் சங்கம் செயல்பட பல மிரட்டல்களுக்கும் .அடக்குமுறைகளுக்கும் ஆனாலும் மிக தைரியமாக எதிர்கொண்டவர் .நம் கிராம பகுதிகளில் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தியவர் .ஆனாலும் வெகு சிலரே முத்தரையர் சங்கத்தில் தீவிர கவனம் செலுத்தியவர்கள் .பேட்டை .திரு கா .கதிரேசன் ,திரு .கா.சுப்பிரமணியன் .திரு இராஜகோபால்,ஆலங்காடு மேகநாதன் ,உப்பூர் தமிழழகன் (தற்போது வழக்கறிஞர் ) பின்னத்தூர் பிச்சைக்கண்ணு ஆசிரியர் ,மன்னங்கோட்டகம் ராஜாராம் கரையங்காடு மனோகரன்,கற்பகநாதர் குளம் ராமலிங்கம் ,மற்றும் ரவிச்சந்திரன் ஆசிரியர்,தில்லைவிளாகம் கல்யாணசுந்தரம் ,போன்றோர்களே எனக்கு தெரிந்த வகையில்..பல சமயங்களில் திருச்சி ,திரு மாணிக்கம் ,திரு அம்பலத்தரசு ,திரு வேங்கடசாமிதிரு LION ஜெயபால் ,திரு .பொன் .முருகையன் ஆகியோர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு கூட்டங்கள் ,திரு ,எல் .எஸ் .பி .அவர்களால் அடிக்கடி நடத்தப்பட்டது. சில திருமண விழாக்களுக்கு .அப்போதைய தலைவர் திரு .ஆன்டியப்பன் அவர்களையும் ,மறைந்த .ஆலங்குடி திரு .வெங்கடாசலம் அவர்களையும் தலைமையேற்க வைத்து மக்களுக்கு சங்கத்தின் மீது நம்பிக்கையை கொண்டுவந்தனர் .இந்த நடவடிக்கைகளினால் எரிச்சலடைந்த தேவர் இனத்தை சார்ந்தவரும் அரசியலில் மேல்மட்டத் தொடர்புடையவரும் ,அப்போதைய சாராயக்கடை அதிபர் .திரு க .ப .சொக்கலிங்கம் அவர்களின் கூட்டத்தால் இரவோடு இரவாக ஆலங்காடு தாக்கப்பட்டது .நம்மவர்களின் வீடுகளும் ,வாகனங்களும் ,சேதம் அடைந்தன .வந்தவர்களில் ஒருவர் உயிர் இழந்தார். ஆனால் காவல் துறையால் 144 தடை உத்தரவு போடப்பட்டு பொது மக்கள் அனைவரும் சிறையில் அடைக்கப் பட்டனர் .பின்னர் நீதி மன்றத்தில் சரணடைந்த,திரு எல் .எஸ்.பி .உட்பட்ட ஒன்பது நபர்களும் பிணை மறுக்கப்பட்டு,ஏழு மாத காலம் கடலூர் சிறை வாசத்திற்க்குப்பின்னால் ,தி .மு.க .திரு .தமிழ்செல்வம் ,அ .தி.மு.க.திரு சேகர்.,சி .பி .ஐ .திரு மார்க்ஸ்,திரு சந்திரசேகர ஆசாத் ,திரு N .சுப்பிரமணியன் ஆகிய நம் இன அரசியல் பிரமுகர்களின் கடும் முயற்சியால் விடுவிக்கப்பட்டனர் .இந்த சம்பவதிர்க்குபிறகு சங்கம் வேகமாக பரவத்தொடங்கியது .உப்பூர் குமாரவேல் ,கழுவன்காடு,ராஜ்குமார் போன்றோர் சங்கத்தில் இணைந்தனர் .1996 இல் நம் இளையோர்களுக்கும் தேவர் இன இளையோர்களுக்கும்வீரன்வயல் பகுதியில் உண்டான சிறு பகையில்,இரவில் ஆள் தெரியாமல் நம்மவர் என நினைத்து ,நாடார் இன அன்பழகன் படுகொலை செய்யப்பட்டார் .குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை .திரு எல்.எஸ்.பி .அவர்களின் தலைமையில் நடந்த சாலை மறியலுக்கு பிறகே குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.ரூ 19000. நாடார் குடும்பத்திற்கு சங்கத்தின் மூலம் நிதி உதவியும் செய்யப்பட்டது .1997 இல் ஆலங்காட்டில் பண்ணையார் நிலத்தில் காலங் காலமாக குடியிருந்த நம்மவர்கள் எந்த ஒரு பிரதி பலனும் இன்றி வெளியாக்கப்படனர் .இதிலும் திரு .எல் எஸ்.பி .மீது வழக்கு ,இவரின் செல்வாக்கு மக்களிடையே உயர்வதை கண்ட அரசியல் கட்சிகள் பலவும் அழைப்பு விடுத்தன .ஆனால் ஒன்றியப் பெருந்தலைவர் பதவிக்கு சிங்கம் சின்னத்தில் ,திரு வீரபத்திரன் அவர்களை எதிர்த்து போட்டியிட்டு இரண்டாவது இடத்தினை பெற்று நமது வாக்குகளின் எண்ணிகையை அரசியல் கட்சிகளுக்கும் .மற்ற சமூகத்தாருக்கும் உணர்த்தினார்.பிறகு மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்ந்து எடுக்கும் முறை இல்லாமல் போய்விட்டது .ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினராக சுயேட்சையாக ஒரு முறை தேர்ந்து எடுக்கப்பட்டார்

பேட்டையின் பெருமகனார் .திரு.கா.கதிரேசன்.அவர்கள் .எங்களதுஊரில் நமது சமுதாயத்தில் முதல் பட்டதாரி .அனைத்து இனசமூகத்தாரிடம் நல்ல அணுகுமுறையும் ,மதிப்பும் கொண்டிருந்தவர்.ஊருக்கு ஒரு மகுடமாய் விளங்கியவர் .அண்ணன் அவர்கள் .1972 க்குமுன்பு வரை தம்பிக்கோட்டை மைனர் பண்ணையால் ஆக்கிரமிப்புசெய்யப்பட்டு இருந்த ,ஆவுடையார் கோவிலுக்கு சொந்தமான சுமார் 66ஏக்கர் நிலப்பரப்பில் நம்மவர்களே குடியிருந்தனர் ஆனால் அனுபவிக்கும்உரிமை கிடையாது அதில் இருந்த தென்னை மரங்கள் நம்மவர்களால்நடப்பட்டது .தேவர் இனத்தவரின் அடக்குமுறைகளுக்குமமிரட்டல்களுக்கும் ஆளாக்கப்பட்டிருந்த நம் மக்களை எண்ணி ,அதைஉடைத்தெறிய புறப்பட்டார் அண்ணன் கல்லூரி படிப்பை முடித்தவுடன்சில பெரியவர்களின் துணையோடு திருவாடுதுறை ஆதினம் அவர்களைசந்தித்து நிலைமையை விளக்கினார்,இதைக்கேட்ட ஆதீனம் அவர்கள்குடியிருந்து மரம் நட்ட உங்களுக்கே அனுபோக உரிமை தருகிறேன் என்றுஒப்பந்த பத்திரம் எழுதிவிட்டார்கள் .இதனை கேள்விப்பட்ட ஆதிக்கசக்திகள் கடும் சினம் கொண்டனர் .அண்ணனை பல வகையிலும்மிரட்டினர் ,தென்னந்தோப்புகளில் தேங்காய் ெட்டவந்தவர்களைநம்மவர்கள் விரட்டியடித்தனர் .அதுமுதல் அவரை போற்றத்தொடங்கினர்நம் மக்கள் .அவர் சார்ந்து இருந்த தி .மு .கவில் ,ஒன்றியப்பிரதிநிதி,மாவட்ட பிரதிநிதி ,மாவட்ட விவசாய அணித்தலைவர் ,மற்றும்கோவிலூர் ,பேட்டை ,ஆகிய ஊர்களில் உள்ள இந்து அறநிலயதுறைதிருகோவில்களின் அறங்காவலராக பதவி வகித்துள்ளார் .அண்ணன்மறைந்த நாளன்று மாவட்டத்தில் உள்ள தி.மு..பொறுப்பாளர்களும்,மக்கள் பிரதிநிதிகளும் அணைத்து கட்சி ,மத சமுதாயத்தினரும் திரளாககலந்து கொண்டனர்.அவரது இடத்தை இதுவரை யாராலும்நிரப்பமுடியவில்லை .அவரது கல்வி சான்றிதழில் முத்துராஜா என்று குறிப்பிட்டு இருந்தகாரணத்தால் தான் பார்த்து வந்த நிலவள வங்கி நிர்வாகி ,வேலைபறிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் எதுவும் சேர்க்க அல்லது குறைக்க எங்களுக்கு EMAIL செய்யவும்.

பட்டுக்கோட்டையும் முத்தரையரும்.... பகுதி 1

பகுதி 1                            http://www.facebook.com/groups/mutharaiyar/

பெயருக்கும் ஊருக்கும் எந்த தொடர்பும் இல்லாத ஊர் பட்டுக்கோட்டை "இங்கு பட்டும் இல்லை, கோட்டையும் இல்லை" வேண்டுமானால் இப்படி அழைக்கலாம் "முத்தரையர் கோட்டை" என்று காரணம் இந்த ஊரினை சுற்றிலும் முத்தரையர் மக்கள் பெரும்பாண்மையாக  வாழ்ந்து வருகிறார்கள், 
ஆள வேண்டிய இவர்கள் யாருக்கோ தமது அதிகார இடத்தினை, தமக்கே தெரியாமல் விட்டுக் கொடுத்துவிட்டு வாழ்கிறார்கள். 
முதலில் சட்டமன்ற உறுப்பினர்: - 1958 ம் ஆண்டிற்க்கு முன்பு அதிராம்பட்டினம் சட்டமன்ற தொகுதியாகவும், பின்னர் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியான பின்னும், பின்னர் தொகுதி சீரமைப்பில் பேராவுரணி தொகுதியின் சில இடங்கள் இணைந்த பின்னரும் கூட தொகுதியில் 52 % மக்கள் முத்தரையர்கள் என்பது அந்த தொகுதியில் வாழும் முத்தரையர்களுக்கு (கூட) தெரியாது ஆனால் இந்த உண்மை பிற சமுகத்தவர்களுக்கு நன்றாக தெரியும்.

 அதனால் அவர்கள் கையாலும் முறை "பிரித்தால்வது" ஆமாம் அதுதான் உண்மை, அந்த தொகுதில் வாழும் தேவர், கள்ளர், வெள்ளாளர் இனதினர்,
 எமது சமுகதினை கூறு போட்டு ஆண்டு வருகிறார்கள். 1991 - ம் ஆண்டு திரு.எட்டுப்புலிக்காடு ராமன் சுயேட்சையாக தனித்து நின்று (சிங்கம் சின்னத்தில்) 15000 ஓட்டுக்களைப் பெற்றார், சில ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார், இ2ருந்தாலும் அன்று ஏற்ப்பட்ட எழுச்சி பின்னர் ஏனோ மழுங்கிவிட்டது (அ) மழுங்கடிக்கப் பட்டது, பின்னர் 1996 -ம் ஆண்டு தேர்தலில் மதிமுக சார்பில் திரு. ரெங்கனாதன் நின்ற போது சுமார் 18000 ஓட்டுக்களைப் பெற்றார், 2006 - ம் ஆண்டு தேர்தலில் திரு. ஜெயபால் (சுயேட்சை) நின்ற போது 12000+ ஓட்டுக்களையும், 2011 - ம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் திரு. முரளிகணேஸ் சுமார் 13000 ஓட்டுக்களையும் பெற்றார்.

 இவ்வாறு இன உணர்வோடு உள்ள சுமார் 10,000 - 20,000 மக்கள் என்றாவது முத்தரையர்கள் வெற்றிப் பெறுவார்கள் என்று காத்திருக்கிறார்கள் எனோ தெரியவில்லை மற்றவர்களுக்கு இந்த எண்ணம் வர மறுக்கிறது, 
அருகில் இருக்கும் பேராவுரணி, ஆலங்குடி தொகுதி முத்தரையர்களுக்கு இருக்கும் இன உணர்வில் 100% ல் 10% இருந்தாலும் நமது இனத்தவர்தான் சட்டமன்ற உறுப்பினர் ..! அன்னாலும் என்னாலோ...!!! ஊராட்சி ஓன்றிய பெருந்தலைவர்: - பட்டுக்கோட்டை தொகுதியைப் பொருத்தவரை இரண்டு ஓன்றியங்கள் உள்ளடங்கியது (பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர்), இன்று அந்த இரண்டு இடங்களிலும் கள்ளர்களே ஓன்றிய பெருந்தலைவர்களாக உள்ளனர், 
உடனே அப்படியென்றால் ஓன்றிய குழு உறுப்பினர்கள் ( Councilor)அவர்கள் எண்ணிக்கையில் கூடுதலாக இருக்கும் என்று எண்ணிவிடாதீர்கள், உண்மை கசப்பானது இரண்டு இடங்களிலும் நம்மவர்கள் கூடுதல் எண்ணிக்கையில் Councilor களாக இருக்கிறார்கள், இங்கு தான் நான் கூரிய பிரித்தாலும் கொள்கையை மற்றவர்கள் கையாள்கிறார்கள், ஆம் நம்மவர்கள் எண்ணிக்கையில் கூடுதலாக இருந்தும் இருப்பது ஓரே கட்சியில் இல்லை, எதிர் எதிர் கட்சிகளில் இருக்கிறார்கள்,
 இதுதான் நான் முன்பே கூரிய மற்றவர்களின் பிரித்தாளும் தந்திரம், இதில் மிக எளிதாக நம்மவர்கள் பாகடைக்காய்களாக்கப் படுகின்றனர். இந்த பிரித்தாளும் சூட்சுமத்தில் இருந்து ஒரு முறை தப்பிய நாம் பட்டுக்கோட்டை ஓன்றியப் பெருந்தலைவராக வெற்றிப் பெற்றொம் (மறைந்த திரு.ஜெயபால்), பின்னர் சுதாரித்துக் கொண்ட மற்ற இனத்தவர் இதுவரை நம்மவர்களை போட்டியில் கூட அனுமதிப்பதில்லை. ஊராட்சி மன்ற தலைவர்கள் : - இதில் மற்றவர்கள் அதிகம் தலையிடுவதில்லை காரணம்.

 அவர்களுக்கே நன்றாக தெரியும், முத்தரையர்கள் இன்னும் தாண்டாத நிலை (இந்த பதவியையே நம்மவர்களைப் பொருத்தவரை பெரிய பதவியாக கருதுவதால் மற்ற பதவிகளுக்கு இவர்கள் போட்டியாக கூட இருக்க தயாரில்லை) இதில் போட்டிகள் கூட நம்மவர்களுக்குள் மட்டும்தான், இன்றும் பெரும்பாண்மை ஊராட்சி மன்ற தலைவர்கள், முத்தரையர்களே.
      அரசியல் கட்சிகள் : - நான் முன்பே கூறியது போல பட்டுக்கோட்டையை பொருத்தவரை.. அதிமுக (கள்ளர்), திமுக (வெள்ளாளர்), காங்கிரஸ் (தேவர்), தேமுதிக (யாதவர்), இதில் முக்கியமாக அதிமுகவில் எண்ணிக்கையில் அதிகம் உள்ளவர்கள் முத்தரையர்கள் ஆனால் பதவி ? முன்பு இந்த கட்சியில் பிரபலமாக இருந்தவர் திரு. அச்சகம் சந்திரசேகர் , அவரும் பல முறை முயற்சி செய்தும் ஒன்றும் நடக்காததால் கட்சி மாறி தேமுதிக சென்று பின்னர் சில வருடத்திற்கு முன்பு மறைந்தார். இப்பொழுது அந்த கட்சியில் சொல்லிக்கொள்ளும் படி இருப்பவர்கள், முத்துப்பேட்டை ரோடு ராஜேந்திரன், அ.ப.மோகன், கலைமணி போன்றவர்கள் மட்டுமே... திமுகவை பொருத்தவரை இங்கு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக இருந்த மறைந்த திரு. ஜெயபால் தவிர பெயர் சொல்லும் படி பெரிய தலைவர்களாக யரையும் வரவிடவில்லை 
இப்பொழுது இருப்பவர்களில் பெயர் சொல்லும்படி உள்ளவர்கள் மாளியக்காடு ரமேஷ், சேண்டாக்கோட்டை மனோகரன், மணிமாறன் என்று விரல் விட்டு என்னக்கூடியவர்களே உள்ளனர், காங்கிரஸை பொருத்தவரை திரு. வீ.மா.காசினாதன் (மாவட்ட தலைவர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு), பாரதிய ஜனதாவில் மாவட்ட தலைவர் திரு. முரளிகணேஸ், என்பதோடு தேசிய கட்சிகளில் நம்மவர்களின் ஆதிக்கம் குறைவு, ஒரே ஆறுதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் திரு. பக்கிரிசாமி உட்பட நம்மவர்களின் ஆதிக்கம் சற்று அதிகம், தேமுதிக இந்த பட்டியலில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை முத்தரையர் சங்கங்கள் : முன்பு முத்தரையர் சங்க செயல்பாடு என்பது பட்டுக்கோட்டையில் அ.பா.மோகன்,
 மதுக்கூரில் கலைமணி, என்று கட்டுக்கோட்பாக சென்றது, பின்னர் திரு. கு.ப.கிருஷ்ணன் தொடங்கிய "தமிழர்பூமி" கட்சியில் இணைந்து கொண்டது அந்த காலகட்டத்தில் முத்தரையர் சங்கம் செயல் இழந்து அனைவரும் "தமிழர்பூமி" யில் தங்களை இணைத்துக் கொன்டனர். பின்னர் முத்தரையர் முன்னேற்ற சங்கம் திரு. சூரப்பள்ளம் ராஜ்குமார், வேப்பங்குளம் ஆசிரியர் போன்றோர் முன்னெடுத்து சென்றனர் மேலும் சங்க செயல்பாடுகளில் முத்துப்பேட்டை ரோடு பாலு போன்றோரின் செயல்பாடுகள் பாரட்டும் விதத்தில் அமைந்துள்ளது, சங்கம் சாராமல் செயல்படுவோரும் உண்டு அதில் குறிப்பிடதக்கவர்கள் பள்ளிக்கொண்டான் சசிகுமார் (ஊராட்சி மன்ற தலைவர்) , வீ.மா.வீரப்பன் (சர்வேயர்), முதல்சேரி கல்யாணசுந்தரம் (முன்னாள் அமைச்சர் கோவேந்தன் மருமகன்), 
                                         ஆக்கம் 
                                                        சஞ்சய்காந்தி அம்பலக்காரர்,
                                                         ஒருங்கிணைப்பாளர், 
                                              இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் 
                                                 

பேராவூரணி (சட்டமன்றத் தொகுதி)


http://www.facebook.com/groups/mutharaiyar/
பேராவூரணி (சட்டமன்றத் தொகுதி)
பேராவூரணி தஞ்சாவூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதி எல்லைக‌ள்

பேராவூரணி தாலுக்கா
ஒரத்தநாடு தாலுக்கா (பகுதி)
தளிகைவிடுதி, பாண்டிபழமவைக்காடு, வெட்டுவாக்கோட்டை-மிமி,வெட்டுவா
க்கோட்டை-மி, சென்னியாவிடுதி, நெய்வேலிவடபாதி, நெய்வேலிதென்பாதி, வெங்கரை பெரியக்கோட்டைநாடு, வெங்கரை திப்பன்விடுதி மற்றும் வெங்கரை கிராமங்கள், பட்டுக்கோட்டை தாலுக்கா (பகுதி) நம்பிவயல், கொள்ளுக்காஅடு, அனந்தகோபாலபுரம், வடபாதி, அனந்தகோபாலபுரம் தென்பாதி, பாதிரங்கோட்டை தென்பாதி, பாத்ரங்கோட்டை வடபாதி, அதம்பை வடக்கு,அதம்பை தெற்கு, நடுவிக்கோட்டை, காயாவூர், பூவளூர், வழுதலைவட்டம், வாட்டாத்திக்கோட்டை கொள்ளூக்காடு, வாட்டாத்திக்கோட்டை உக்கடை பீமாபுரம், எடையாத்தி வடக்கு,எடையாத்தி தெற்கு,சூரியநாராயணபுரம், செருவாவிடுதி வடபாதி, கிருஷ்ணபுரம், செருவாவிடுதி தென்பாதி, மடத்திக்காடு, துறவிக்காடு, புனவாசல் மேற்கு, புனவாசல் கிழக்கு, குறிச்சி, நெய்வவிடுதி, அனந்தீஸ்வரபுரம், அலிவலம், கொண்டிகுளம்,மணவயல், துவரமடை, கழுகபுளிக்காடு, பில்லன்கிழி, பாலத்தளி,எண்ணைவயல், எழுத்தாணிவயல், பண்ணைவயல், பைங்காட்டுவயல், கூத்தடிவயல்,சொக்கநாதபுரம், பூவணம், கட்டயன்காடு உக்கடை, மதன்பட்டவூர், ஓட்டங்காடு, திருச்சிற்றம்பலம் மேற்கு,திருச்சிற்றம்பலம் கிழக்கு, களத்தூர் மெற்கு, களத்தூர் கிழக்கு, ஒட்டங்காடு உக்கடை, நடுவிக்குறிச்சி, கட்டையங்காடு, புக்கரம்பை, பள்ளத்தூர், மருதங்காவயல், கொள்ளூக்காடு, வெளிவயல்,புதுப்பட்டிணம், ஆண்டிக்காடு, எட்டிவயல், உதயமுடையான், ஆலடிக்காடு, அழகிநாயகிபுரம், ஏரளிவயல், கரிசவயல், தண்டாமரைக்காடு, பள்ளிஓடைவயல், புதிரிவயல், ரெண்டாம்புளிக்காடு, அலமதிக்காடு, மரவன்வயல், கள்ளிவயல் மற்றூம் சரபேந்திரராஜன்பட்டினம் கிராமங்கள் , *ஆலங்குடி தாலுக்கா (பகுதி) (புதுக்கோட்டை மாவட்டம்)
காட்டாத்தி கிராமம், (**காட்டாத்தி கிராமம் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் கீழ் வந்தாலும் கள மற்றும் பூகோள ரீதியாக பேராவூரணி சட்டமன்ற தொகுதியின் எல்லைப்பரப்பிற்குள் வருகிறது).

ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி

1971 குழ.செல்லையா (MUTHARAIYAR)சுயேச்சை

1977 எம்.ஆர்.கோவிந்தன் (MUTHARAIYAR)அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

1980 எம்.ஆர்.கோவிந்தன்(MUTHARAIYAR) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

1984 எம்.ஆர்.கோவிந்தன் (MUTHARAIYAR)அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

1989 ஆர்.சிங்காரம் ( தேவர் ) இந்திய தேசிய காங்கிரசு

1991 M.கிருஷ்ணமூர்த்தி ( தேவர் ) திராவிட முன்னேற்றக் கழகம்

1996 எஸ்.வி.திருஞாணசம்பந்தம் (MUTHARAIYAR) தமாகா

2001 எஸ்.வி.திருஞாணசம்பந்தம் (MUTHARAIYAR) தமாகா

2006 எம்.வி.ஆர்.கபிலன் (MUTHARAIYAR)அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

Current Mla Actor Arun panthaian ( ennaku theriyala )தே மு தி க
இப்ப சினிமாகரன் இவரு எந்த இனம் என்று தெரிவில்லlai 
                                                                                            K.Govindaraj